"இல்ல டாட் நான் அப்படி நினைக்கல."
"பின்ன என்ன காரணம் இருக்க முடியும் அஜய்?"
"அத அம்மாகிட்ட கேட்டே தெரிஞ்சுக்கலாம் அது மட்டுமில்ல, அம்மா உங்கள அவாய்ட் பண்ற மாதிரியே இல்ல அப்புறம் நீங்க எப்படி அவாய்ட் பண்ரான்னு சொல்றீங்க?"
"சரி விடு தனத்துக்கிட்ட பேசி பார்க்கலாம்."
வீடு வந்து சேர்ந்தார்கள் காரிலிருந்து வாங்கி வந்த திங்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போனார்கள்
பின்னாடியே ஜாபரும், நிக்கத்தும் வந்து சேர்ந்தார்கள்.
"அஜய், என் ராஜா! " நிக்கத் அவனை அனைத்துக் கொண்டார்.
"ஹாய் பாட்டிம்மா!" அவரை அனைத்துக் கொண்டான் அஜய்.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராஜா, நீ உன் அப்பாவை பார்த்தது, அவனோட சேர்ந்தது ரொம்ப சந்தோஷம் ராஜா."
"எனக்கும் பாட்டிம்மா, ரொம்ப சந்தோஷம் பாட்டிம்மா இன்னிக்கு பூரா அப்பாவோடத்தான் இருந்தேன்." அவன் அப்பாவையம் சேர்த்து அனைத்துக் கொண்டான், அப்துல் தன் மகனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான், எல்லோருக்குமே கண்ணில் கண்ணீர் குளம் கட்டியது.
"ஐயா அஜய், அன்னிக்கு ஊர்ல நீ ஏக்கத்தோட அழுதது இன்னிக்கு பூர்த்தி ஆயிடுச்சு ராஜா, இன்னிக்கு உன் அப்பா உன் கண்ணெதிர்ல வந்துட்டான்யா, உன்னோட சந்தோஷம் உன்னோட வந்துடுத்து ராஜா, எங்களுக்கும் இப்போதான் மன நிம்மதி கிடைச்சுது", கண்ணில் கண்ணீருடன் கூறினார் ஜாஃபர்.
அஜய், ஜாஃபரையும் அணைத்துக் கொண்டு, "தேங்க்ஸ் மாஸ்டர்."
"சரி ஏன் தனம் ஆபிசுக்கு போயிட்டா இன்னிக்கு? உன்னோட இருக்கலாமில்ல?" நிக்கத் கேட்கவும் ,
"ஆமாம் என்னத்துக்கு எங்களை பார்க்கணும், பேசணும்னே, உனக்கும் தனத்துக்கும் ஏதாவது பிரச்சனையா?"
அப்துல் முகம் மறுபடியும் சோகமாக மாறியது, "என்ன தங்கம், என்ன ஆச்சு?" நிக்கத், தன் மகன் முகத்தில் சோகத்தை பார்த்து மனம் தவித்தார் .
அஜய், அவர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்தான், அப்பா ஏன் இவ்வளவு சோகமாறார், அம்மா அப்படி ஒன்னும் பேசலியே, இவரே ஏன் இவ்வளவு வருத்தப் படறார்?' என்று நினைத்துக் கொண்டான்