(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சரி வாங்க வெளியே போகலாம்!" 

வெளியே வரும்போது சாய்ரா அவளிடம் ஒட்ட்டிக் கொண்டாள், அவர்கள் மூவரின் மகிழ்ச்சியை பார்த்து நிக்கத், ஜாஃபர், அப்துல், அஜய் எல்லோரும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், ஜாஃபர் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வரும்போதே ஒரு பாகில் ஏற்கனவே தனத்துக்காக போட்டு வைத்திருந்த நகை புடவை அதோடு அவளுக்காக ஜாஃபர் வைத்திருந்த அந்த நிலத்தின் பாத்திரம் ஏற்கனவே அஜயின் பேரில் பதிவு செய்து வைத்திருந்தார் ஜாஃபர், அதையும் எடுத்து வர கூறியிருந்தார் .

"சரி இப்ப என்ன தனம், எல்லாம் சரியாயிடுத்தா? நேரம் ஆகி கொண்டிருக்குது!"

"அவள் அப்துலை பார்த்து புன்னகைத்தாள். அஜயின் புறம் திரும்பினாள், அஜய் கண்களை மூடி திறந்தான். அவளும் எல்லோரையும் பார்த்து சரி என்று தலை அசைத்தாள், நிக்கத், அவளின் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் , 'பெரியம்மீ எனக்கில்லையா?" என்று சாய்ரா வரவும், அவளுக்கும் முத்தம் கொடுத்தார், அப்போது வாசலில் கார் வந்து நின்றது, யார் என்று எட்டி பார்த்தாள் தனம் "உங்க அம்மா அப்பாதாம்மா" என்றார் ஜாஃபர்.

அவர்கள் உள்ளே வந்தவுடன் அஜய் உள்ளே சென்று தான் வாங்கிவந்த புடவையை கொடுத்தான். அதை வாங்கி பார்த்த அவள், "நானே வாங்கியிருந்தா கூட இவ்வளவு அழகான புடவையை வாங்கியிருப்பேனா சந்தேகம்தான்." என்றாள்,அஜயை பார்த்து .

"குட், டாட் கேட்டுக்கோங்க, குட் செலக்ஷன்னு சொல்லிட்டாங்க சந்தோஷம்தான?"

"என்ன இது ஆதூவோட செலக்ஷனா?"

"எங்க ரெண்டு பேருதும் தான் தனம்."

"யாருதா இருந்தா என்ன சூப்பர், தேங்க்ஸ். ஆனா எதுக்கு புது சாரீல்லாம் "

தனத்துடைய பெற்றோரும் தங்கைகளும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"என்ன நடக்குது இங்க?" என்று புரியாமல் கேட்டார், லட்சுமி.

நிக்கத் எல்லாம் விவரிச்சதும், ஆச்சர்யத்தில் எல்லாரும் பேச்சிழந்தார்கள்,"இது மட்டுமில்ல தனம்மா, அவங்களுக்கு இப்போ உங்க முறைப்படி நிக்கா செய்ஞ்சுடலாம், நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் மேரேஜ் வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க?"

தனத்தையும்,அப்துலையும் மாறி மாறி பார்த்தார்கள் அவள் பெற்றோர்கள், அப்துலின் அழகை பார்த்து பூரித்தார்கள் பெற்றோர்கள், பொறாமை பட்டாள் வள்ளி, பார்வதிக்கு சந்தோஷம், அஜயும், அப்துலும் அண்ணன் தம்பி போல இருந்தார்கள்.

"அந்த குழந்தைங்க யாருங்க?" என்று நிக்கத்திடம் லட்சுமி கேட்கவும்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.