(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சொல்ல ஒண்ணுமில்ல , அதான் சொல்லிட்டேனில்ல அவனுக்கு நிக்கா ஆயிடுத்து அவ்வளவுதான்."

"அப்ப குழந்தைகளை எங்களோட அனுப்பிடுங்க. "

"என்னது, என் குழந்தைகளை உங்களோட அனுப்பறதா? இன்னும் நான் உயிரோடத்தான் இருக்கேன், என் குழந்தைகளை எனக்கு காப்பாத்த தெரியும் முதல்ல எல்லாரும் கிளம்புங்க. "

"உங்க மகன் என்ன சொல்றான் பாருங்க ஜாஃபர் "

"அவன் சொல்றதுல ஒரு தப்பும் இல்ல, இப்ப நீங்கல்லாம் கிளம்புங்க, உங்களுக்கு விளக்கம் கொடுத்துட்டேன்.  நீங்க கிளம்பலாம், அவன் குழந்தைங்கள அவன் பார்த்துப்பான் நீங்க உங்க குடும்பத்தை பார்த்துக்குங்க அவ்வளவுதான், கிளம்புங்க."

"இருங்க உங்களல்லாம் என்ன பன்றேன்னு பாருங்க.... " என்று ஆளாளுக்கு ஏதோ வைது  கொண்டே சென்றனர்.

"எங்கடா அஜய்?"

"இதோ இங்கருக்கேன் மாஸ்டர்"

"வாடா தங்கம், நம்ம வீட்டுக்கு இப்போதான் வர நல்ல நேரம் வந்திருக்குது, வா ராஜா, தனமும் வந்திருந்தா நம்ம குடும்பம் முழுமையாயிருக்கும் , தனத்தை வர சொல்லும்மா நிக்கத் இன்னிக்கு நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கலாம். "

"இல்ல வாப்பா, அவ ஆபிசுக்கு போயிருக்கா, அப்புறம் ஒரு நாள் நான் கூட்டிட்டு வரேன்."

"ஏன்பா ஃபோன் செய் ராஜா..."

"இல்ல வாப்பா இப்ப வேணாம்."

"சரி, அஜய் ராஜா சொல்லு என்ன விஷயம்?"

"இல்ல மாஸ்டர், நேத்து சாய்ரா கிளம்பி போனதுலேர்ந்து அவளை பார்க்க ஆசையாயிருந்தது, அதான் வந்தேன். வந்த இடத்துல......."

"அது பரவாயில்ல ராஜா, நீ வந்ததால ஒண்ணுமில்ல, எப்படியிருந்தாலும் ஒரு நாள் தெரியத்தான் வேணும் பரவாயில்ல இப்பவே தெரிஞ்சுக்கிட்டாங்க."

"சரி வாப்பா, அம்மீ நான் கிளம்பறேன், ஆபிசுக்கு டைம் ஆயிடுத்து, அஜய் நீ என்ன செய்ய போற?"

"நான் கிளம்பறேன் டாட், காலேஜுக்கு டைம் ஆயிடுத்து. பாட்டிம்மா, நான் கிளம்பறேன்."

"சரி ராஜா, நான் சாயந்தரம் அங்க வரேன் தனத்தை பார்க்கணும் போலயிருக்கு," என்றார்  நிக்கத்.

 

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.