(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அஜயும், அப்துலும் எல்லாம் வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்துலுக்கு புரை ஏறிற்று, "என்ன டாட், தனம் நினைக்கிறாளா, உங்கள?"

அவன், அஜயின் முதுகை தட்டி கொடுத்து "என்னடா எங்களை கிண்டலடிக்கிறியா?"

"ஐயோ இல்லை டாட்!"

"ஹாஹா" என்று சிரித்தான் அப்துல்.

“அவள் நினச்சா எனக்கு சந்தோஷம்தாண்டா. இன்னும் எவ்வளவு முறை புரை ஏறினாலும் பரவாயில்ல. "

"சரி சரி நீங்க நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க டாட், ஹ்ம்ம் நடத்துங்க. "

அதை கேட்டு உல்லாசமாக சிரித்தான், அப்துல் .

அப்துல் போனை எடுத்து ஜாஃபரை "வாப்பா கிளம்புங்க அம்மீயோட, நானும் அஜயும் வீட்டுக்கு போயிண்டிருக்கோம்."

"சரி ராஜா கிளம்பறோம், தனம் எங்க ஏன் அவ உங்க கூட இல்ல?"

"தனம் ஆபிசுக்கு போயிருக்கா வாப்பா!"

'சரி நாங்க வர காரணம்?"

"எனக்கு உங்கள பார்க்கனும்போல இருக்கு டாட்!"

"ஏன்பா ஏதாவது பிரச்சனையா?"

"டாட் ப்ளீஸ் ஒன்னும் கேக்காதீங்க.. "

"சரி ராஜா இப்பவே நாங்க வரோம்!"

அப்துல் போனை வைத்தான். அவன் மனசு வருத்தத்தில் இருப்பது தெரிந்து. அஜய் அவன் தோளில் கை வைத்து அழுத்தி, தான் துணையாய் இருப்பதை தன் அப்பாவுக்கு தெரிவித்தான். அப்துலும் அவன் தோளை அழுத்திய கையை தடவி கொடுத்து அவனை பார்த்து புன்னகைத்தான்.

"எதுக்கு டாட் இப்படி பீல் பண்றீங்க?, மாஸ்டரும் பாட்டிம்மாவும் கவலப் படப் போறாங்க டாட்."

"யு ஆர் ரைட், எங்க வாப்பா அம்மீக்கு என்ன பத்தி கவலை அதிகம்தான், அதுவும் எனக்கு எப்போ நிக்கா ஆச்சோ அப்போலேந்து அவங்க ரொம்ப வருத்தப் பட்டு போயிட்டாங்க, பாவம்."

"ஐ அம் சாரி டாட்! "

"அஜய், உனக்கு ஒரு தம்பி தங்கை இருக்காங்க, ரொம்ப நல்ல குழந்தைகள் அஜய், நீ அவங்களோட பாசமா இருப்பியா அஜய்?"

"என்ன டாட் இது, என் தம்பி தங்கைங்க கிட்ட நான் பாசமாயில்லாம எப்படி இருப்பேன், என்ன

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.