(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அவன் என் மகனா இருந்தாலும், அது அவன் சம்பாத்தியத்துல வாங்கிய வீடு ஆண்ட்டி, அது அவன் வீடு அதனால அவன்கிட்ட கேக்கணும், அவன் என்ன வேண்டாம்னா சொல்லப்போறான்? இது அவன் சித்திகள் கல்யாணமாச்சே விடுவானா அவன்." அவனை பற்றி பேசும்போது பெருமையாக இருந்தது. அது  அவள் பேச்சில் தெரிந்தது.

" சரிம்மா அப்ப பதினஞ்சு நாள்லேயே வச்சுக்கலாம் உனக்கு ஒன்னும் கஷ்டமில்லேன்னா தனம், "என்றார் கண்ணம்மா .

"கண்டிப்பா வச்சுக்கலாம் ஆண்ட்டி, ஒன்னும் பிராப்லம் இல்ல, இன்னிக்கே நான் வெட்டிங் ஹால் பார்க்க போறேன்!"

"இல்ல தனம் நீ உன் மகன்கிட்ட பேசு அவன் சரின்னு சொன்னா உங்க வீட்டிலேயே வச்சுக்கலாம் அனாவசியமா ஹால்லுக்கெல்லாம் செலவு செய்ய வேணாம்."

"தேங்க்ஸ் ஆண்ட்டி! "

"எதுக்கு தாங்க்ஸ் எல்லாம்?"

"இல்ல புரிஞ்சு பேசறீங்களே, அதான்!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, அப்போ ஏதோ விவரமில்லாம பேசிட்டேன், பிறகு யோசிச்சு பார்த்தா தப்புன்னு புரிஞ்சுது."

"என் தங்கைங்க கொடுத்து வச்சவங்க. இந்த மாதிரி ஒரு மாமியார் வீட்ல வந்து வாழறதுக்கு."

"ரொம்ப சந்தோஷம்மா நீ எங்களை புரிஞ்சுண்டதுக்கு."

“இல்ல ஆண்ட்டி நான் நிஜமாத்தான் சொல்றேன், இது வெறும் புகழ்ச்சி இல்ல உண்மையைத்தான் சொல்றேன்."

'இரும்மா சாப்பிட்டுட்டு போலாம்."

"இல்ல ஆண்ட்டி நான் ஆபிசுக்கு போகனும் டைம் ஆயிடுச்சு ஏற்கனவே, நான் கிளம்பறேன் ஆண்ட்டி, வீட்ல எல்லார்கிட்டயும் பேசிட்டு எனக்கு கணபார்ம் பண்ணுங்க ஆண்ட்டி ,நான் எல்லா ஏற்பாடும் பண்ணிடறேன்."

"சரிம்மா!"

"சரி ஆண்ட்டி நான் கிளம்பறேன் !"

"சரிம்மா!"

அவள் கிளம்பினாள் ஆனால் ஆபிஸ் போற மூடே இல்லை. ஆது... ஆது ஏண்டா நீ இப்ப என் கண் முன்ன வந்த நான் என்ன பண்றதுன்னு தெரியலையே ? ஆதூ இத்தனை நாளா நீ வரமாட்டியான்னு கவலப் பட்டேன், இப்ப நீ வந்ததுக்கப்புறம் நீ ஏன் வந்தேன்னு இருக்கு ஆதூ.... ஏண்டா இப்படி?' மனது வருத்தப் பட்டது.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.