(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

இருக்கமுடியுமா? அதுவும் பெண் பிள்ளை அவளுக்கு அம்மான்னு ஒருத்தி வேணாமா? பெண் பிள்ளைக்கு அம்மா எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும்னு இல்ல தனம், என் சாய்ராவுக்கு நல்ல அம்மாவா நீ இருப்பே தனம், அவளுக்காகவாவது நீ ஒத்துக்கோ. "

"நீங்க இருக்கீங்க அவங்களுக்கு, நல்ல அம்மாவா, பாட்டியா அவங்களுக்கு நீங்க இருக்கீங்க ஆண்ட்டி வேறென்ன வேணும், ஆனா இந்த கல்யாணம் அவங்களுடைய பியூச்சருக்கு நல்லதில்ல ஆண்ட்டி புரிஞ்சுக்குங்க?"

"இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு தனம், நான் தோத்துட்டேன். நீ, நான் சொன்னா கேட்ப்பேன்னு நினைச்சேன், ஆனா என்னை நீ ஏமாத்திட்ட, பரவாயில்ல போகட்டும், ஜாஃபர் கிளம்பலாம் வாங்க!"

" ஐயோ ஆண்ட்டி என்ன இது இவ்வளவு கோவமா போறீங்க? நான் உங்கள என் அம்மாவா நினைச்சிட்டுருக்கேன் நீங்க இவ்வளவு கோவமா போறீங்க? ப்ளீஸ் ஆண்ட்டி நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

அப்புறம் நான் ஏன் இப்படி சொல்றேன்னு தெரியும், நீங்க புத்திசாலி, பொறுமையானவங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஆண்ட்டி ப்ளீஸ்!"

"அம்மா கொஞ்சம் உள்ள வா உன்னோட கொஞ்சம் பேசணும், பாட்டிம்மா நான் வரவரை வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடறேன் மாஸ்டர் !"

"சரி என்பது போல தலை ஆட்டினார்கள் இருவரும் .

உள்ளே அம்மாவை கூட்டிக் கொண்டு போய், "அம்மா ப்ளீஸ் நான் சொல்றத கேளு, என் கூட பொறக்கலேன்னாலும் அவங்க ரெண்டு பேரும் என் தங்கை, தம்பிதான். அவங்க நம்ம கூட இருக்கனும், எனக்கு அப்பாவும் வேணும், அவங்களும் வேணும், எல்லோரும் ஒண்ணா இருந்தா நான் ரொம்ப சந்தோஷத்தோட இருப்பேன், ப்ளீஸ்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ, அத்தோட நீ லீகலா அப்பாவோட மனைவியா இருக்கனும். அப்போதான் என் பிறப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும். என் மனசுக்குள்ள ரொம்ப நாளா இருந்த வருத்தம் . உனக்கு அது புரியாதது தான் வருத்தமாயிருக்கு, உனக்கு நான் சொல்ல தேவையில்லை, அதனால இனி எல்லாம் உன்னோட முடிவுதான் சரிம்மா நான் வெளிய போறேன் நீ யோசிச்சு சொல்லு."

கண்ணில் கண்ணீர் வழிந்தது, தன் மனதில் இருந்தத அவன் அம்மாவிடம் கூறிவிட்டான், அம்மாவை வறுத்துகிறோம்னு தெரியும், ஆனால் வேறு வழியில்லை எல்லாமே நல்லதுக்குதான், என்ற மன நிலைமையுடன் ஜாஃபர், நிக்கத்திடம் சென்றான் .

"என்ன ராஜா என்ன ஆச்சு, தனம் எங்க?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.