"என்ன அபூ, என்ன சொல்ற? வேலையா?"
"ஆமா வாப்பா!"
"எங்க அபூ?"
"நம்ம தனம் வேல செய்ற கம்பெனியில தான், அவ என்ன வேலை செய்யணும், படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு சொன்னா, அது மட்டுமில்ல அப்பாவோட உழைப்பில உக்கார்ந்து சாப்பிடறயே வெக்கமாயில்லையான்னு கேட்டா? "என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
"டாட், என்ன சொல்றீங்க?" அப்பாக்கு ஏன் தெரியல எல்லார்கிட்டயும் அவங்க பெர்சனல் விஷயத்தை ஷேர் பன்றாரு, அவங்க என்ன நினைப்பாங்க அம்மாவை பத்தி என்று அஜய் நினைத்துக் கொண்டான் , அதே எண்ணம்தான் தனத்திற்கும்..
"ராஜா, உன்னோட மனைவி உன் கிட்ட என்ன சொன்னாலும் அது உங்க ரெண்டு பேர் பெர்சனல், வெளியே சொல்லக் கூடாது ராஜா!" என்றார் நிக்கல்.
"அது... அது வந்து, சாரி தனம்."
"ஏய்... பரவாயில்ல, நம்ம ஆண்டிதானே பரவாயில்ல."
"என்னது நம்ம ஆண்ட்டியா? அவங்க என் அம்மீ."
"ஐயோ நல்ல ஜோக்தான், எனக்கு ஆண்ட்டி, அங்கிள் அம்மா அப்பா மாதிரிதான் , என்ன ஆண்ட்டி நான் சொல்றது கரெக்ட் தான?"
"ஆமாம்மா, நீ எங்க மகதான்னு, நான் தான் ஏற்கனவே சொன்னேனே."
"பாத்தியா?" என்று அப்துலை பார்த்து அவள் கேட்க அவனும் சிரித்துக் கொண்டான்.
"சரி இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், அதனால யாருக்கு என்ன வேணுமோ எல்லாம் ஆர்டர் செய்யுங்க."
"டாட், ஐ அம் ஹாப்பி பார் யு . அது சரி இன்னிக்குத்தான் நீங்க ரெசுமி கொடுத்தீங்க அதுக்குள்ளே எப்படி வேலை கிடைச்சுடுச்சு?"
"அது மானேஜர் மேடம் தான் சொல்லனும், அம்மீ உங்களுக்கு தெரியுமா நம்ம தனத்துக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு, அவளுக்காக துவா கேளுங்க அம்மீ அல்லாகிட்ட, அவ நன்னாயிருக்கணும்னு ஆசி கொடுங்க வாப்பா!"
"இத நீ சொல்லனுமா ராஜா, நீ மகன்னா, தனம் எங்க மக டா, அவளுக்கு எங்க ஆசி எப்பவும் உண்டு ராஜா!"
"தனம் சொல்லவேயில்லியே உனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்குன்னு ?"
"அது நேத்து தான் தெரிஞ்சுது ஆண்ட்டி, ஆனா நேத்து நான் வரும்போதே வீட்ல எல்லாம்