(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அங்கிருந்த சோபாவிலிருந்து எழுந்தான், அவனை பின் பற்றி எல்லோரும் எழுந்தார்கள் மரியாதை நிமித்தம்.

"எல்லாரும் உக்காருங்க, ஏதாவது சாப்டீங்களா? நிக்கத்..." என்று அவர்களை உபசரித்து விட்டு, தன் மனைவியை கூப்பிட்டார்.

"இதோ வந்துட்டேங்க!" அவர் வெளியே வந்தார்.

"அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தியா?"

"இதோ கொண்டு வரேங்க."

"சரிம்மா !"

"சொல்லுங்க ஊர் மனுஷங்க எல்லாம் ஒன்னு கூடி வந்திருக்கீங்க, என்ன விஷயம்?"

அவரை ஏற இறங்க பார்த்தார்கள்.

"என்ன பெரிய மனுஷர் நீங்க, எங்களை கிண்டலடிக்கறீங்களா?"

"ஐயோ, இல்ல ஐயா, என்ன விஷயம் எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்களே அதான் கேட்டேன்."

"உங்க மகன் செய்திருக்க காரியம் உங்களுக்கு தெரியுமில்லையா, பெரிய மனுஷன் நீங்க உங்க மகனுக்கு எடுத்து சொல்ல கூடாதா? பெரிய மனுஷன் நீங்க இப்படி மகனை தட்டி கேக்காம இருந்திருக்கீங்க ?"

"அப்படி என்ன செய்ஞ்சான் என் மகன்?"

கேட்டீங்களே ஒரு கேள்வி, ஒரு இருப்பது வயது மகன் இருக்கான், உங்களுக்கு தெரியுமா தெரியாதா?"

அவர் அப்துலை நிமிர்ந்து பார்த்தார். அவனும் அவரை பார்த்தார், பிறகு நடந்ததை கூறினார், "நீங்க நம்பினாலும், நம்பலேன்னாலும் இதான் நடந்தது, அவனுக்கே இப்பத்தான் ரெண்டு நாள் முன்னாடிதான் தெரியும் அதுக்கு முன்னாடி அவனை அனாதையா இருந்தவனை வளர்த்தது நான்தான். இதுக்கு மேல நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது அந்த பொண்ணையே என் மகனுக்கு நிக்கா பண்ணிட்டேன். அதனால பிரச்சனை பண்ணாதீங்க "

"அது எப்படி எங்க வீட்டு பெண்ணை நிக்கா பண்ணிட்டு நீங்க இன்னொரு பெண்ணையும் உங்க மகனுக்கு நிக்கா செய்திருக்கீங்க , எங்களை ஏமாத்தியிருக்கீங்க, இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?"

"இத பாருங்க, நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் இனி நீங்க என்ன வேணா முடிவு செய்ஞ்சுக்கோங்க  எனக்கு ஒண்ணுமில்ல, இந்தாங்க டிபன் வந்துடுத்து சாப்பிடுங்க."

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இவ்வளவுக்கு மேல நாங்க டிபன் வேற சாப்பிடணுமா என்ன? அதெல்லாம் வேணாம்,இப்ப கடைசியா என்ன சொல்றீங்க?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.