(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

இருவரும், "பையா நாங்க குளிச்சிட்டு வந்துடறோம் இங்கேயே இருங்க," என்று கூறி குளிப்பதற்கு ஓடினார்கள். போகும் போது தங்களுடைய பேகை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றார்கள்.

"நான் இங்கே தான் இருப்பேன் சாய்ரா குட்டி நீ போய் குளிச்சிட்டு வா! "என்று கூறினான்.

நிக்கத், அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் அன்போடு பேசுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

சாய்ராவும் இம்ரானும் குளித்துவிட்டு வந்து தனத்தை அணைத்துக்கொண்டு "ஐ லவ் யு மாம் "என்றார்கள்.

"ஐ லவ் யூ இம்ரான்!, ஐ லவ் யூ சாய்ரா! என்றாள் தனம்.

அதைப் பார்த்த அஜய்யும் தனத்தை அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ மா!" என்றான். மூன்று குழந்தைகளும் நிக்கத்தையும் அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ படிமா!"என்று சாய்ராவும் இம்ரானும் சொல்லவும் "ஐ லவ் யூ பாட்டிமா! "என்று அஜய் கூறினான்.

நிக்கத், குழந்தைகளை அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ குழந்தைகளா! "என்று கூறினார்.

தனம், அப்துலுக்கு போன் செய்து உடனே வர சொல்லி கூறினாள்..   

"என்ன ஆச்சு தனம்மா, உடம்பு சரி இல்லையா உனக்கு?" என்று கேட்டான்

"  அதெல்லாம் ஒன்னும் இல்லை,ஒரு சர்ப்ரைஸ் சீக்கிரம் வா!" என்று கூறினாள்.

"சர்பிரைஸ்ன்னா உடனே ஓடி வந்துடறேன் கவலையே படாதே, என்னை ஏமாத்தமாட்டியே தனம்?"

"ஆது பீ சீரியஸ், சீக்கிரம் வா!"

" எஸ் மாம், ஐ வில் பி தேர் இன் ஆஃப் அவர்." என்று ஃபோனை வைத்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போதும் உண்மையாகவே அஜய்யையும் அவன் அம்மியையும் பார்த்து நம்ப முடியாமல் அவர்கள் இருவரையும் இருக்கமாக அணைத்துக் கொண்டான்.

இருவருக்கும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான்,"அம்மி, வாப்பா எங்க?" என்று கேட்டான் அப்துல்.

"அம்மி வாப்பாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம் இல்ல, நம்ம குடும்பம் முழுக்க இங்கே இருப்போம் இல்ல?"

"வாப்பா வேலையைப் பற்றி உனக்குத் தான் தெரியுமே தங்கம், அவருக்கு நேரமே இல்ல."

"அம்மீ நீங்க வந்திருப்பது ரொம்ப சந்தோஷம் ,அஜய் செல்லம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேண்டா!" என்று அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து அணைத்து கண்ணீர் விட்டான்.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.