(Reading time: 16 - 32 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

செய்தார். ராஜேஷ் வீட்டுக்குக் குழந்தைகளுடன் சென்றனர். அவருக்கு இரண்டு மகன்கள் இனியன், மகிழன் என அவர்களும் சுட்டிக் குழந்தைகள். இனியன், மகிழனுடன் வேனிலும், கதிரும் விளையாட ஆரம்பித்தார்கள். தினேஷின் அண்ணி இருவருக்கும் உணவு தயாரிக்க உள்ளே சென்றுவிட, ரம்யாவும் அவருக்கு உதவ உள்ளே சென்றாள். இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம்டா தினேஷ். அப்போ ஊர்ல எப்படி தன்னந்தனியா உன்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு வந்து நின்னாளோ, அதே துணிச்சலோட உன்னைக் கைபுடிச்சிட்டா. அவளோட அப்பாவின்  பிடிவாதம் உனக்கு எதாவது ஆபத்தை உண்டாக்கிவிடுமோன்னு பயத்தில தான் நான் அவளை கல்யாணம் பண்ண வேணாம்னு சொன்னது. மத்தபடி எந்தக் காரணமும் இல்ல. நீங்களும் பிள்ளைகளும் இங்கே இனி அடிக்கடி வந்து போய் இருங்க என்றார். தனது அண்ணன் தனது குடும்பத்தையே ஏற்றுக் கொண்டதில் தினேஷுக்கு மகிழ்ச்சி.

அவர்கள் கிளம்பும்போது, ஒரு நிமிடம் தினேஷ் என்றவர் உள்ளிருந்து ஒரு பைலை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். இந்தா இது அம்மா, உனக்கும் எனக்கும் சொத்தில் பங்கு பாகம் பிரிச்சு எழுதி வச்ச உயிலும், உனக்கு சேர வேண்டிய வீடு நிலத்தோட பத்திரமும். இப்போ கல்யாணம் பண்ணி நீயும் பெரிய மனுசனாகிட்ட, அதனால்  உன் கைல கொடுத்தாச்சு. உன் தேவைகேற்ப உன் விருப்பம் போல பயன்படுத்திக்க என்றார். அண்ணாவிடம் நன்றி சொல்லிவிட்டு தினேஷும் ரம்யாவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினர். தினேஷின் ஊருக்கே சென்று விடலாம் என்ற நோக்கில் அதற்கேற்ப வேலைகளைத் தொடங்குகினர்.

இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்களைத் திரட்டிய தினேஷ், அதற்கேற்ற பயிற்சிகளையும் முறையாகப் பகுதிநேரத்தில் கற்கிறான். ஃப்ரீலான்ஸ் கட்டிட வடிவமைப்பாளராய் பணியை தினேஷ் தொடங்க, ரம்யா அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுகிறாள். அவளின் விடாமுயற்சியில் ரம்யாவுக்கு தினேஷின் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு கணினி ஆசிரியராக நிரந்தரப் பணி கிடைத்தது. வேனிலுக்கும், கதிருக்கும் ஊருக்கு வந்தது மிகவும் பிடித்தது. தினேஷின் சித்தி தனக்கே பேரன், பேத்திகள் கிடைத்துவிட்டது போல ஆசையோடும் அன்போடும் அவர்களைக் கவனிக்க உதவி செய்தார். ரம்யாவுக்கு தங்கள் குழந்தைகளுக்கு நிறைய உறவுகள் கிடைத்தது நிறைவாக இருந்தது. தினேஷுக்கு  தன் அம்மா வாழ்ந்த இடத்தில் மீண்டும் தான் வாழ வந்திருப்பதும், உடன் துணையாக ரம்யாவும் குழந்தைகளும் இருப்பது பேருவகையாக இருந்தது.

பள்ளி நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் ரம்யா ஃப்ரீலான்ஸ் மென்பொருள் திட்ட

5 comments

• Such a nice story and a very good ending...
This story reminded lot of moments in college life..lab assignment seminar projects life stories in college final year your etc...
• Avanga parents perumai padura alavukku vazhandhu kattitanga rendu perum :hatsoff: nalla puridhal irundhal mattume idhunsadhiyam :yes: ivanga rendu peroda unconditional love is simply superb....
Azhagana kadhai ma'am 👏👏👏👏👏👏👏
Parents um konjam pillaigalukaga yosithu parkalam, thappana choice aga irundhal ippadi otha leg la stand panuradhu okay...but ivangala pathi theriyamal just caste pidichi thongikittu irukamal they can stand for their kids.
Good one ma'am :hatsoff: rendu part um :cool:
Thank you and wish you good luck for your future endeavours 👍

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.