(Reading time: 8 - 16 minutes)
Kadhal mugam kandukonden
Kadhal mugam kandukonden

“அன்னிக்கு நீ தான் என் வாழ்க்கையின் களங்கரைவிளக்கம்னு சொன்ன” கயல் சொல்ல

“உண்மைதான்” என்றான்

“நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனு சொன்ன” கயல் கேட்க

“யெஸ்” என உணவை மென்றபடி சொன்னான்.

“நீ இல்லைனா என் உயிர் இல்லனு சொன்ன” மீண்டுமாய் கயல்

“அடாடா . . . எல்லா உண்மைதான்” ராகவன்

இதற்கு மேல் பொறுக்க இயலாமல் பத்மினி “எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்றாள்.

“இருங்க பத்மினி . . . எங்க முழுகதையைக் கேட்காம போனா எப்படி?” கயல் அவளை தடுக்க

பத்மினி செய்வதறியாமல் தடுமாறினாள்.

மீண்டும் ராகவனிடம் “நீதான் என் தங்கைனு சொன்னியே” எனக் கயல் கேட்க

“உண்மை உண்மை உண்மை நீதான் என் வாலு தங்கச்சி” என நிதானமாக அவன் சிரித்தபடி கூறினான்.

இதைக் கேட்டதும் பத்மினிக்குள் நிம்மதி பெருமூச்சு. “ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்” என தனக்குள் குழம்பினாள்.

“நான் சினி பீல்டுல நுழைய காரணமே கயல்தான்” என ராகவன் நன்றியுடன் அவளை பார்த்தான்.

“எங்க முதல் சந்திப்பே விசித்திரமானது. சொல்லட்டுமா?” என்ற கயல் தொடர்ந்து “இப்ப உங்க மனக்கண்ணுல கொசுவர்த்தி சுருள் தெரியணும் பத்மினி”

“என்ன?”  வியப்பு மேலிட பத்மினி கேட்டாள்.

“அட சினிமால பிளாஷ்பேக் சொன்னா . . . சுருள் சுருளா வரும்ல அதான்”

விரிந்த புன்னகையுடன் “ஓ. . . ஒகே ஒகே” என தலையாட்டி அவர்கள் சொல்லப் போவதை கேட்க ஆர்வமானாள் பத்மினி.

தட்டில் சுவையான உணவை கொண்டு வந்துக் கொடுத்த ராகவன்“கதை கேட்டுகிட்டே சாப்பிடலாம்” என்றபடி பத்மினியிடம் நீட்டினான்.

மறுக்கமுடியாமல் வாங்கிக் கொண்டாள். கதை கேட்கவும் ஆர்வமானாள்.

கண்டுகொண்டேன் . .  கண்டுகொண்டேன் . . .

Go to Kadhal mugam kandukonden story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

10 comments

• [quote name="Tamil Sri"]Nice update subha waiting 4 your next epi[/quote]
Thank you so much Tamilsri sis 🙏
• [quote name="madhumathi9"]:clap: nice & cute epi mam.eagerly waiting 4 ne,t epi. :thnkx: & :GL:[/quote]
Thank you so much Madhumathi sis 🙏
• [quote name="AdharvJo"]Cool update sis 👏👏👏👏👏👏👏👏 director oda cine varalaru pesapadomo illaiyo kadhal varalaru pesapadum pole 😁😁 kalayanam vendam Chorus ah sonnanga....ippo butterfly feelings ellam varudhu pole 😍😍😍 thanga thangachi annanoda love kku thudhu pole....nadakatum nadatakum....engalodu sernthu kadhai ketka arvam aitanga pole...waiting to see what happens next.
Thank you[/quote]
Thank you so much Adharvjo sis 🙏
• [quote name="Durgalakshmi"]Intresting episode (y)
Kayal character super
Raghav and padmini close aagitanga
Sounds good 😊
Naangalum kathai ketka padmini udan
aarvamaga ullom :D[/quote]
Thank you Durga sis 🙏
• Cool update sis 👏👏👏👏👏👏👏👏 director oda cine varalaru pesapadomo illaiyo kadhal varalaru pesapadum pole 😁😁 kalayanam vendam Chorus ah sonnanga....ippo butterfly feelings ellam varudhu pole 😍😍😍 thanga thangachi annanoda love kku thudhu pole....nadakatum nadatakum....engalodu sernthu kadhai ketka arvam aitanga pole...waiting to see what happens next.
Thank you
• Intresting episode (y)
Kayal character super
Raghav and padmini close aagitanga
Sounds good 😊
Naangalum kathai ketka padmini udan
aarvamaga ullom :D

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.