(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

அப்போது முரளியிடம் வந்த தனசேகரின் மாமியார் சொர்ணம், “தம்பி...எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆளுக்கு அந்த ரத்தம் இருக்கு...ஆனா அவர் ரத்தம் குடுக்க வரமாட்டார்” என்றாள்.

  

“நீங்க ஆள் மட்டும் யார்?னு சொல்லுங்க நான் போய்க் கெஞ்சிக் கூத்தாடி அழைச்சிட்டு வர்றேன்” முரளி பரபரத்தான்.

  

“வந்து...வந்து...என் தம்பி சொக்கு” தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள்.

  

“சொக்கு”ன்னா?” முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான் முரளி.

  

“மாப்பிள்ளையைக் குத்தினானே என் தம்பி சொக்கு?...அவனுக்கு அதே வகை ரத்தம்தான்” என்றாள்.

  

நொந்து போனான் முரளி.  ஆனால், ஒரே நொடியில் சுதாரித்துக் கொண்டு, “அவர் இப்ப எங்க இருப்பார்?ன்னு சொல்லுங்க நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

  

“ஹூம்...அவன் இப்ப எங்க இருக்கானோ?...எந்த பொந்துல ஒளிஞ்சிட்டிருக்கானோ தெரியலையே?...போலீஸுக்கு பயந்து வெளியூர் போயிருந்தாலும் போயிருப்பான்”

  

சில விநாடிகள் யோசித்த முரளி, “அவர் வீடு எங்கிருக்கு?ன்னு மட்டும் சொல்லுங்க” கேட்டான்.

  

சொர்ணம் சொல்ல, தங்கவேலுவை அழைத்துக் கொண்டு லாரியிலேயே புறப்பட்டான்.

  

சொக்குவின் வீட்டிற்குச் சென்ற முரளி, கதவில் பூட்டு தொங்குவதைப் பார்த்து மனம் நொந்தான். “இப்ப என்ன பண்றது சார்?” தங்கவேலுவிடம் கேட்டான்.

  

“அவன் போலீஸுக்கு பயந்து ஓடியிருப்பான்”ன்னே நெனைக்கறதை விட.... “அவன் போலீஸில் சரண்டர் ஆகியிருக்கலாம்”ன்னு ஏன் நினைக்கக் கூடாது” என்றார் தங்கவேலு.

  

“சார்...என்ன சொல்றீங்க?....”முரளி கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்க,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.