(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

பொன்னுரங்கம் சுந்தரியையும் தன்னுடன் அழைத்துச் சென்று சொக்குவின் கைகளைப் பற்றி “ரொம்ப நன்றிப்பா..என் மகன் உயிர் உன்னால் காப்பாற்றப்பட்டு விட்ட்து” என்றார் தழுதழுத்த குரலில்.

  

தன் வாழ்க்கையில் அடிதடி...ரத்தம்...கத்திக்குத்து...அரிவாள் வெட்டு...சாராயம்...போலீஸ் லாக்கப்...போன்றவற்றை மட்டுமே சந்தித்து வந்திருந்த சொக்குவிற்கு அந்த நிலைப்பாடு சற்று நெகிழ்ச்சியைத் தந்தது.

  

மரியாதை நிமித்தமாக அவன் எழ முயற்சிக்க, “பரவாயில்லை உட்காரு தம்பி”என்றாள் சுந்தரி.

  

கலங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தான் சொக்கு.

  

அப்போது அவனை நோக்கி நடந்து வந்த சொர்ணம், “தம்பி...நீ வெளித் தோற்றத்துல கொஞ்சம் கரடு முரடானவனா இருந்தாலும் இன்னோட உள் மனசு ரொம்ப இளகிய மனசுன்னு காட்டிட்டே...என் பொண்ணுக்கு தாலிப் பிச்சையும் போட்டுட்டே” என்றார் அவனைக் கட்டிக் கொண்டு.

  

ராமலிங்க பூபதி அவனருகில் வந்து அவன் தோளை ஆறுதலாய்த் தொட்டு தன் நன்றியை உணர்த்தினார்.

  

“உறவுகளின் அன்பான நெருக்கத்தில் இத்தனை சுகம் உண்டா?” மனதிற்குள் நினைத்துக் கொண்டான் சொக்கு.

  

கையில் ஆப்பிள் ஜூஸோடு வந்த தங்கவேலு அதை சொக்குவிடம் நீட்ட, தானே வாங்கி அதைப் புகட்டி விட்டாள் சொர்ணம்.

  

“என்ன சொக்கு?....இதெல்லாம் உனக்கு புது அனுபவமாய் இருக்குமே?...அப்படித்தானே?”.

  

அவன் ஆப்பிள் ஜூஸைப் பருகிக் கொண்டே, மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.