“மார்னிங் மஞ்சு... ரிப்லையே காணோமேன்னு பார்த்தேன்...” என்றாள் துர்கா.
“உங்க மெசேஜ் பார்த்த உடனே வந்துட்டேன் துர்கா... சொல்லுங்க...”
“ஒரு லாங் டெர்ம் ப்ராஜக்ட் வந்திருக்கு மஞ்சு... உன் எக்ஸ்பீரியன்ஸ்க்கு ஏத்த மாதிரியே இருக்கு... முக்கியமா லினக்ஸ் (Linux) எக்ஸ்பர்ட்டா இருக்கனும்னு கேட்டு இருக்காங்க...”
“வாவ் துர்கா, என் ப்ரோஃபைலை கொடுங்களேன்...”
“இது நம்ம டிபார்ட்மென்ட் ப்ராஜக்ட் கிடையாது, மஞ்சு... ஆனாலும், உனக்கு சரியா தான் இருக்கும்... ஆனால் ஒரே ஒரு விஷயம்...”
“என்ன துர்கா?”
“இது சிகாகோ ப்ராஜக்ட் இல்லை... ஜியார்ஜியா, அட்லான்டா ப்ராஜக்ட்... “
“அட்லான்டாவா???”
“ஆமாம், சிகாகோவும் அட்லான்டாவும் ரொம்ப பக்கத்துல கிடையாது... தூரம் இருக்கும்... உனக்கே தெரியும் மனோஜ் இப்போதைக்கு சிகாகோல இருந்து வர முடியாது...”
மஞ்சு ‘இது என்ன புது குழப்பம்?’ என யோசித்தாள்...
“உன் குழப்பம் எனக்குப் புரியுது மஞ்சு... பட் இது லாங் டெர்ம் ஆப்பர்ச்யூனிட்டி... உனக்காக நாம அவசர அவசரமா வாய்ப்புகள் கண்டுப்பிடிக்குறதால, இது நல்ல வாய்ப்புன்னு எனக்குத் தோணுது...”
“நீங்க சொல்றது சரி துர்கா... என்னால சட்டுன்னு ஒரு முடிவு எடுக்க முடியலை... நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டுமா???”