(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

“அதைப் பத்தி கேட்க தான் உங்களை கூப்பிட்டேன் மனோஜ்..” என்றுத் தொடங்கி துர்கா சொன்ன வேலை வாய்ப்பை பற்றி விபரங்கள் சொன்னாள் மஞ்சு.

  

“என்னைக் கேட்டா சரின்னு சொல்லிடு pbs...” என்று உடனே சொன்னான் மனோஜ்...

  

“சிகாகோ ஒரு பக்கம் இருக்கு, அட்லான்டா இன்னொரு பக்கம் இருக்கு மனோஜ்... இப்போ இருக்குறதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்???”

  

“பரவாயில்லை மஞ்சு... நீ இங்கே வந்துட்டா நாம அப்பப்போ மீட் செய்யலாம்... இப்போ நீ உலகத்துல எங்கேயோ இருக்க.. உன்னோட சரியா பேசக் கூட முடியலை...”

  

“அது சரி... ஆனால், இது சரியா வருமான்னு தெரியலையே...”

  

“வரலைன்னா, அப்போ ஃபிக்ஸ் செய்துக்கலாம் மஞ்சு...”

  

மஞ்சு ஏதேதோ காரணங்கள் சொல்லி வேலையை தொடர்வதாக சொன்னதற்குப் பிறகு மனோஜ் ஒருத் தடவைக் கூட அவள் வேலையை ராஜினாமா செய்வதுப் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை...

  

மனசுக்குள் அந்த எண்ணம் ஓட...

  

“சரி மனோஜ், அப்போ துர்கா கிட்ட ஷேர் செய்ய சொல்றேன்...” என்றாள் மஞ்சு...

  

“நான் உன்னை ரொம்ப மிஸ் செய்றேன் pbs...”

  

“நான் அதை விட ரொம்ப ரொம்ப ரொம்ப உங்களை மிஸ் செய்றேன்...!!!!”

  

க்ஸ்க்யூஸ் மீ துர்கா...”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.