(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

“ஓகே மஞ்சு... ஆனால் ரொம்ப டைம் எடுக்காதே... லாங் டெர்ம் என்பதால நிறைய ப்ரோஃபைல்ஸ் வர வாய்ப்பு இருக்கு... நாம சீக்கிரம் உன் ப்ரோஃபைல் ஷேர் செய்றது நல்லது!”

  

“சீக்கிரமே சொல்றேன் துர்கா... தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்...”

  

மீண்டும் தன இடத்திற்கு திரும்பிய மஞ்சுவிற்கு குழப்பமாக இருந்தது!

  

சிக்காகோவில் இருந்து அட்லான்டா எவ்வளவு தூரம் என்று கூகிளில் தேடித் பார்த்தாள்! 719 மைல்கள்!!!!

  

அவளுக்கு மலைப்பாக இருந்தது!!!!

  

தானாக முடிவெடுக்காமல், மனோஜிடம் கேட்டு விடுவது என்ற முடிவிற்கு வந்தாள்...

  

அவளின் மொபைலில் மனோஜிற்கு ‘மிஸ்ட் கால்’ கொடுத்து விட்டு, அவன் அழைக்க காத்திருந்தாள்...

  

ஐந்து நிமிடங்களில் அவளின் மொபைலில் தொடர்புக் கொண்டான் மனோஜ்...

  

“pbs...”

  

மனோஜின் குரல் கேட்டதுமே மஞ்சுவிற்கு தரையில் கால் பதியவில்லை...

  

“மனோஜ்... டிஸ்டர்ப் செய்துட்டேனா???”

  

“இல்லை pbs... இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்... மிஸ்ட் கால் கொடுத்தீயே, துர்கா ஏதாவது சொன்னாளா???”

  

மனோஜின் குரலில் கலந்திருந்த ஆர்வம் புரிந்து மஞ்சுவிற்கு சிலிர்த்தது...

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.