Page 6 of 6
அன்றிலிருந்து மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில், மஞ்சு அட்லான்டா கிளம்ப டிக்கெட்டும், பயணத்திற்கு தேவையான மற்ற பேப்பர்களும் தயாராகி அவளின் கைக்கு வந்து சேர்ந்தது...
மனோஜை மீண்டும் நேரில் சந்திக்கப் போவதை நினைத்து அவளின் மனம் அப்போதே துள்ளிக் குதிக்கத் தொடங்கியது...
அடுத்து வந்த சனிக்கிழமை இரவு நேரத்தில்... சென்னை ஏர்போர்ட்டில் இருந்து தன் குடும்பத்தினர் அனைவரிடமும் விடைப்பெற்றுக் கிளம்பியப் போது மஞ்சுவிற்கு வருத்தம் எதுவுமில்லை... பல மாத பிரிவிற்கு பின் கணவனை சந்திக்கப் போகும் எதிர்பார்ப்பினால் ஏற்பட்டிருந்த வந்திருந்த மகிழ்ச்சி மட்டுமே இருந்தது...!
தொடரும்...