(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

அவர்கள் வருகையை எதிர் நோக்கி வாசலிலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் ராக்கம்மா.  அக்கம்பக்கத்துப் பெண்கள் அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். 

  

“உன் மகளுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது...எதுக்கு இப்படி பயந்து சாகறே?”

  

அந்த பஞ்சு மில்லின் காம்பௌண்ட் ஓரமாய் நடந்த அந்த ஐந்து பேரும் டார்ச் ஒளியை நாலாப்பக்கமும் பீய்ச்சிக் கொண்டே நடக்க,

  

அமைதியான அந்த நடு நிசியில் முனகல் சப்தம் கேட்டது.

  

எல்லோரும் அப்படியே நின்று முனகல் வரும் திசையில் டார்ச்ச் ஒளியைப் பாய்ச்சினர்.

  

புதருக்குப் பின்னால் குப்புறக் கிடந்து முனகிக் கொண்டிருந்தான் ஒருவன்.  அவனருகில் இன்னொருவன் அமைதியாய்க் கிடந்தான்.

  

எல்லோரும் பரபரப்பாகி, புதருக்குப் பின்னால் ஓடிச் சென்று அவர்களை வெளியே தூக்கி வர, முரளி தன் தங்கை அங்கு எங்காவது கிடக்கிறாளா? என்று தேடினான்.

  

அந்த இருவரும் ஒருவன் லேசாய் சுயநினைவிற்கு வர, முரளி கேட்டான், “யாருப்பா நீங்க?...உங்களை யார் அடிச்சது?....இப்படி உதடெல்லாம் கிழிஞ்சு போய்க் கிடக்கு...என்ன நடந்தது இங்கே?”

  

“அது வந்து....”என்று சொல்ல ஆரம்பித்தவன், ஒரு சிறிய யோசனைக்குப் பின் வேறு மாதிரி சொன்னான்.  “இந்தப் பாதைல ஒரு வயசுப் பொண்ணு நடந்து போச்சு...யாரோ ஒருவன் அதன் பின்னாடியே வந்து....திடீர்னு அதை குண்டுக் கட்டாய் தூக்கிட்டு ஓடினான்!...நாங்க போய் அந்தப் பொண்ணைக் காப்பாத்த முயற்சி பண்ணினோம்!...ஆனா அவன் எங்களை விட பலசாலியா இருந்ததினால..எங்களை அடிச்சுப் போட்டுட்டு...அந்தப் பொண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டான்!” என்றனர்.

  

“அப்படின்னா..அவன் தூக்கிட்டுப் போனது என் தங்கச்சி வசந்திதான்” என்று சொன்ன முரளி,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.