“இல்லை மஞ்சு! என்னை ஸ்கிப் செய்து, எனக்கு தரதா சொன்ன ப்ரோமோஷனை அமித்க்கு கொடுத்ததே முதல்ல சரி கிடையாது! அதும் இல்லாம அந்த ஸ்ரீனி என்ன சொல்றான்னா, அமித் தான் இந்த டீம்ல திறமையானவனாம், புது ரோல் படி நான் இனிமேல் அமித் கிட்ட ரிப்போர்ட் செய்யனுமாம்.”
“என்ன?? ஸ்ரீனி எதுக்கு ரிப்போர்டிங் ஸ்ட்ரக்சர் மாத்துறார்?” என்றாள் மஞ்சு அதிர்ச்சியுடன்!
அதுவரை மஞ்சு மனோஜின் புது மேனேஜர் ஸ்ரீனி பற்றி தவறாக நினைக்கவில்லை. புது டீம், அமித் போட்ட ‘ஜிங்-ஜாங்’ பார்த்து அவனுக்கு உயர்வுக்கு கொடுத்திருப்பார் என்று தான் நினைத்தாள்.
“உனக்கு முழு பிக்சர் தெரியலை pbs! ஸ்ரீனி என்னை த்ரேட்டா (threat) பார்க்குறார். அவர் இங்கே விசிட் செய்தப்போ, எல்லா கிளையன்ட் மேனஜர்ஸ் & கான்டாக்ட்ஸ் எல்லோரையும் பார்த்து பேசினார். இனிமேல் அவர் தான் அவங்களுடைய மெயின் காண்டாக்ட் பெர்சன்னும் சொன்னார். இருந்தாலும் என்னை எல்லோருக்கும் ஏற்கனவே தெரியும், அதனால என்னையே கான்டாக்ட் செய்தாங்க, செய்துட்டும் இருக்காங்க.”
“அது எப்படி ஸ்ரீனிக்கு தெரியும்?”
“சில விஷயம் எல்லாம நான் ஸ்ரீனியைக் கேட்டு தானே செய்தாகனும்! அந்த விதத்துல நான் அவர் கிட்ட சொன்னேன்.”
“ஒ!! நீங்க நல்லவரா சொன்னதால இப்போ உங்களை பழி வாங்குறார். என்ன உலகம் இது!” என்றாள் மஞ்சு வறட்டு சிரிப்புடன்.
“எனக்கு அங்கே வேலை செய்ய பிடிக்கவே இல்லை pbs!” என்ற மனோஜ் இன்னும் இறுக்கமாக மஞ்சுவை கட்டி அணைத்துக் கொண்டான்.
மஞ்சுவிற்கு என்ன பதில் சொல்வது என்றுப் புரியவில்லை!