இன்றைய நிலையில் அவள் அவனை சார்ந்து இருப்பவள்! மனோஜிற்கு வேலை பிடிக்கவில்லை என்றால் அவள் என்ன செய்ய முடியும்?
மனோஜ் மஞ்சுவை விடுதலை செய்து நேராக அமர்ந்தான்.
“நான் வேற வேலை தேடலாம்னு இருக்கேன், pbs!”
“மனோஜ்? இப்போ நல்ல வேலைல இருக்கீங்க, இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைனா வேற ப்ராஜக்ட் மாத்திக்கலாமே?”
“இல்லை மஞ்சு அதெல்லாம் உடனே நடக்காது. அமித் கீழ வேலை செய்றது, ஸ்ரீனி டீம்ல இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. என்னை அசிங்கப் படுத்துறதுக்காகவே வேணும்னே செய்றாங்க.”
“நீங்க இதைப் பத்தி ஸ்ரீனி கிட்ட பேசிப் பார்த்தீங்களா?”
“பேசிட்டேன், எனக்கு இது பிடிக்கலைன்னும் தெளிவா சொல்லிட்டேன்.”
“யார் கிட்ட சொன்னீங்க? ஸ்ரீனி கிட்டேயா?”
“ஆமாம்! அதுக்கு ஸ்ரீனி என்ன சொன்னான் தெரியுமா? எனக்கு ரோல் மெச்சூரிட்டி இல்லையாம்.”
“எவ்வளவு கொழுப்பு அந்த ஆளுக்கு? எப்படி இப்படி சொல்வார்? எனக்குத் தெரிஞ்சே நீங்க அந்த ரோலை இரண்டு வருஷமா செய்துட்டு இருக்கீங்க, பதவி பேரு தான் வேற!?”
“ப்ச்! எனக்கு சுத்தமா பிடிக்கலை மஞ்சு. நான் வேற வேலை தேடலாம்னு நினைக்கிறேன். என்னை டீமோட் செய்துட்ட மாதிரி ஃபீல் செய்றேன். அங்கேயே தொடர்ந்து வேலை செய்ய எப்படியோ இருக்கு.”