(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

கொடுத்திருக்காங்க. ஆனாலும் எதுவுமே சரியா இல்லை.

  

யெஸ், ரொம்ப பெக்யுலியரான கேஸ்... அந்த பொண்ணுக் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்த மாதிரியான தடயங்கள் எதுவுமே இல்லை... இறந்ததற்கான காரணம் தண்ணில மூழ்கினதால ஏற்பட்ட மூச்சு திணறல்னு மென்ஷன் செய்திருக்காங்க... அவ எதுக்கு அங்கே போனா, என்ன ஒன்னும் தெரியலை. ஆனால் வினோதன், எப்படி இது பார்லிமென்ட் வரைக்கும் போச்சு?”

  

இந்த கேஸ் பத்தி அவர் இந்தியாபேப்பர்ல ஒரு ஆர்டிகில் வந்தது. இந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து ரொம்ப ப்ரெஷர் வருவதா எழுதி இருந்தாங்க. அந்த நியூஸ் வெளி வருவதற்கு முன்னாடி நாள் தான் கடைசியா இந்த கேஸை ஹாண்டில் செய்த இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் வேலையை ராஜினாமா செய்தார்.

  

ஓ!

  

யெஸ், அவர் அனுப்பின ரிப்போர்டை நிராகரிச்ச நீதிபதி, முன்னுக்கு பின் முரணா போலீஸ் விசாரணை குறிப்புகள் இருப்பதா சுட்டிக் காட்டி, இந்த கேஸை நேர்மையான முறையில சீக்கிரம் விசாரிச்சு முடிக்கனும்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லி இருந்தார்.

  

ஓகே. அருள்ராஜ் ஏன் ரிசைன் செய்தார்? எனக்கு அவரை கொஞ்சம் ஞாபகம் இருக்கு. அவருக்கு இன்னும் பத்து வருஷம் கிட்ட சர்வீஸ் இருக்காது?”

  

யெஸ் இருக்கும்... நான் இப்போ உன் கிட்ட சொல்ல போவது அன்-அபிஷியலா எனக்கு தெரிஞ்ச விஷயம். அருள்ராஜ் வேலையை விட்டுட்டு, ஒரு பார்ல போய் உட்கார்ந்து நல்லா தண்ணி போட்டுட்டு கன்னாபின்னான்னு உளறி இருக்கார். இதை அங்கே இருந்த அவர் இந்தியா ரிப்போர்டர் நிரஞ்சன் கேட்டிருக்கார். அதை வச்சு தான் அந்த ஆர்டிக்கிளை அவர் எழுதி இருக்கார். இந்த கேஸ் வர போகுதுன்னு தெரிஞ்ச உடனே எனக்கு தெரிஞ்ச அவர் இந்தியா ரிப்போர்ட்டர் மூலமா நிரஞ்சன் கிட்ட பேசினேன். உனக்கே தெரியும் அவர் இந்தியா பத்திரிக்கைக்கு ரொம்ப நேர்மையான பத்திரிக்கைன்னு மக்கள் மத்தியில நல்ல பேர் உண்டு. இந்த நியூஸ் வந்த உடனே எதிர்கட்சிங்க கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. விஷயம் பார்லிமன்ட் வரைக்கும் போச்சு... அதனால இப்போ கேஸ் நம்ம க்ரைம் ப்ராஞ்ச்க்கு

One comment

  • :clap: ella kesum ippadi niyayamaga nadanthal magizhchiyaaga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.