(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

சொல்லுங்க? நாங்க மனுவை வாபஸ் வாங்கலை. அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லி எனக்கு என் செல்ல கால் வந்தது. போற வழியில ஒரு ஜீப் எங்க காரை இடிச்சு தள்ளினதுல ஏற்பட்ட அடியில தான் என் மனைவிக்கு இந்த நிலைமை.

  

இதை பத்தி நீங்க கம்ப்ளெயின்ட் கொடுக்கலையா?”

  

கொடுக்காமல் என்ன சார். போலீஸ் ஸ்டேஷன்ல யாரும் எங்களை கூப்பிடலைன்னு சொல்லிட்டாங்க. என் மொபைல் சர்வீஸ் ப்ரோவைடர் கிட்ட ரெகார்ட் வாங்கி பார்த்தால் நான் சொன்ன நேரத்துல எனக்கு காலே வரலைன்னு சொல்லிட்டாங்க.

  

ம்ம்ம்

  

சார், என் மகள் தைரியமானவ, தற்கொலை செய்துக்குற கோழை கிடையாது. அவ இறந்து போன விடிகாலைக்கு முந்தின நைட் கூட எங்க கிட்ட பேசினாள். ரொம்ப சாதாரணமா இருந்தாள். அவ கூட நாங்க பிரெண்ட் போல தான் பேசி பழகுவோம். எப்போ எந்த பிரச்சனையா இருந்தாலும் எங்க கிட்ட தைரியமா ஷேர் செய்வா. அன்னைக்கு பேசினப்போ கூட அவ செய்ய போற ப்ராஜக்ட் பத்தி எல்லாம் சொன்னாள்.

  

சூசைட் என்பது சில சமயம் ஒரு ஸ்ப்லிட் செகண்ட்ல கூட எடுக்க கூடிய முடிவு சார். ஆனால் இந்த காதல் தோல்வி பத்தி சொல்லுங்க. போலீஸ் பைல விக்னேஸ்வரன்னு ஒரு பையனை உங்க பொண்ணு லவ் செய்ததா பதிவாகி இருக்கு?

  

அந்த விக்னேஷ் என் பொண்ணோட பிரென்ட் சார். மத்தபடி அவங்களுக்குள்ள லவ் எல்லாம் இல்லை.

  

உங்களுக்கு கட்டாயமா தெரியுமா?”

  

ஹண்ட்ரட் பர்சன்ட் உறுதியா சொல்வேன் சார். என் மகள் யாரையாவது லவ் செய்திருந்தா என் கிட்டேயோ அவ அம்மா கிட்டேயோ சொல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ செத்து போனது மட்டுமில்லாமல் அந்த விக்னேஷ் அவளை காதலிக்க மாட்டேன்னு சொன்னதால தான் அவ செத்து போனான்னு கதை கட்டி விட்டு, அவ பேரை செத்த பிறகும்

One comment

  • :clap: ella kesum ippadi niyayamaga nadanthal magizhchiyaaga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.