(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

யெஸ்...

  

அப்புறம் நாம இந்த விக்னேஷ் பத்தியும் யோசிக்கனும்.

  

என்ன?”

  

முதல்ல அவன் மேல சந்தேகபட்ட மாதிரி இருக்கு, அப்புறம் திடீர்னு எல்லாம் உல்டாவா மாறி அவன் அந்த பொண்ணை ரிஜக்ட் செய்ததாகவும் அதனால் அவ தற்கொலை செய்ததாகவும் விசாரணை மாறி போயிருக்கு.

  

கரக்ட்! அந்த ரோஹினி கடைசியா போன்ல பேசினதும் அந்த பையன் கூட தான்.

  

அவன் வீடு எங்கே இருக்கு வினோதன்?”

  

தன் முன் இருந்த காகிதங்களை நோண்டிய வினோதன்,

  

அவன் வீடு காந்திபுரத்துல இருக்கு. இங்கே இருந்து இரண்டு மணி நேரம் மேல ஆகும்னு நினைக்கிறேன்

  

பரவாயில்லை வா அவனை போய் பார்த்து பேசிட்டு வருவோம்

  

இருவரும் ஜீப்பில் விக்னேஸ்வரனை சந்திக்க கிளம்பினார்கள்.

  

செல்லும் வழியில் திடீரென அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது.

  

உன் போன்ல தான்டா தேன். என்ன இந்த டைம்ல அலாரம் வச்சிருக்க?”

  

போனை வெளியே எடுத்த தேன், நண்பனிடம் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, யாரையோ செல்போனில் அழைத்தான்.

  

One comment

  • :clap: ella kesum ippadi niyayamaga nadanthal magizhchiyaaga irukkum.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.