(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

பேசினான்.

  

வேலையை விட்டு விலகுவதாக ஏற்கனவே சொல்லி விட்டான்... இனி அனைத்தையும் சரியாக ‘ஹான்ட் ஓவர்’ செய்து கிளம்ப வேண்டும்... அதுவும் முக்கியம்...

  

இந்த பொறுப்புகளை சரியாக முடித்து விட்டு பின் மஞ்சுவை சமாதானப் படுத்துவது என்ற முடிவுடன் போனை மீண்டும் கையில் எடுத்தான்.

  

காரை பார்க்கிங் இடத்தில் நிறுத்தி கீழே இறங்கியப் போது மனோஜின் மனம் தடதடத்தது. இன்று புது வேலையில் சேரப் போகிறான்!!! மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது.

  

ஆனாலும் மஞ்சுவிடம் இருந்து வாழ்த்து கூட கிடைக்கவில்லை என்பது அவனின் மனதை உறுத்திக் கொண்டே தான் இருந்தது!

  

கடந்த இரண்டு வாரங்களாக பழைய வேலையில் அனைத்தையும் முடித்து கிளம்பவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது...

  

மஞ்சுவிடம் மனம் விட்டு பேச வேண்டும்... சமாதானம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நேரம் கிடைக்கவில்லை...

  

இந்த புது வேலையில் சேர்ந்த பிறகாவது அவளிடம் பேச வேண்டும்... அவளுடன் நேரம் செலவிட வேண்டும்...

  

மனைவியை பற்றி யோசித்துக் கொண்டே ‘கிங் சாஃப்ட்’ என்ற கொட்டை எழுத்துக்கள் மின்னிய கட்டிடத்தினுள் நுழைந்தான் மனோஜ்.

  

ஃபிரன்ட் டெஸ்க்கில் அவன் பெயர் மற்றும் விபரங்களை சொன்னதும், அவனை இன்டர்வியூ எடுத்து தேர்வு செய்த சேஷாத்ரியே நேரில் வந்து அவனையும் உள்ளே அழைத்து சென்றார்.

  

அது ரொம்ப பெரிய அலுவலகம் இல்லை...! கிங் சாப்ட் வளர்ந்து வரும் நிறுவனம் என்பதால் மனோஜும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் வைத்திருக்கவில்லை... ஆனாலும் அவன்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.