(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

எதிர்பார்த்ததை விட இந்த அலுவலகம் பெரிதாக தான் இருந்தது! கிங் சாஃப்ட்டின் ஹெட் ஆபீஸ் விர்ஜினியாவில் இருந்தது. இங்கே சிகாகோவில் ஒரு கிளை மற்றும் நியூஜெர்சியில் ஒரு அலுவலக கிளை இருந்தது.

  

சேஷாத்ரி மனோஜிற்கு அலுவலகத்தில் முக்கிய இடங்களை சுற்றிக் காட்டி, அங்கிருந்த முக்கிய அலுவலர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

  

“கம்பெனி ஓனர் இங்கே விசிட்க்கு வந்திருக்கார். அவரையும் நீங்க மீட் செய்யனும் மனோஜ்... நான் டைம் கேட்டு இருக்கேன்... ரிப்ளை வந்ததும் சொல்றேன்... அதுவரைக்கும் இங்கே உங்க டெஸ்க்ல வெயிட் செய்ங்க... உங்க யூசர் ஐடி பாஸ்வேர்ட் டேபிளேயே இருக்கு... லாகின் செய்ததும் பாஸ்வேர்ட் சேன்ஜ் செய்ய சொல்லும், மாத்திடுங்க... கம்பெனி பத்தி, நீங்க ஹாண்டில் செய்யப் போற ப்ராஜக்ட்ஸ் பத்தின டீடெயில்ஸ்ன்னு எல்லாம் நான் உங்களுக்கு சில டாகுமென்ட்ஸ் அனுப்பி இருக்கேன்... அதை பாருங்க... படிச்சுட்டு கேள்விகள் இருந்தால் கேளுங்க... வேற ஹெல்ப் வேணும்னா என் அசிஸ்டன்ட் மனிஷாவை கேளுங்க, ஹெல்ப் செய்வா...”

  

“ஷுயர் சேஷாத்ரி... தேங்க்ஸ்...”

  

“குட் லக் மனோஜ்...”

  

சேஷாத்ரி சென்று விட, மனோஜ் தன் புது சீட்டில் அமர்ந்தான்.

  

அந்த புது சீட்டில் அமர்ந்ததும் மனோஜிற்கு மீண்டும் மஞ்சுவின் நினைவு வந்தது... அவளின் இந்த கோபமும், பாராமுகமும் அவனை வெகுவாக உறுத்திக் கொண்டே இருந்தது...

  

சீக்கிரமே அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டே மேஜை மீதிருந்த சிறிய பேப்பரை கையில் எடுத்தான். அதில் சேஷாத்ரி சொன்னதுப் போல அவனின் ஐடி, பாஸ்வேர்ட் இருந்தது. அதை வைத்து லாகின் செய்தவன்... மெல்ல மெல்ல தன் வேலையில் ஆழ்ந்துப் போனான்...!

  

இரண்டு மணி நேரங்கள் சென்றிருக்கும்.... சேஷாத்ரி மீண்டும் அவனை தேடி வந்தார்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.