(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

“லெட்ஸ் கோ மனோஜ்... ஃபிப்டீன் மினிட்ஸ் ப்ரேக்ல உங்களுக்காக ஸ்லாட் வாங்கி இருக்கேன்... சீக்கிரம் வாங்க... ஐ ரியலி வான்ட் யூ டு மீட் ஹிம் டுடே...” என்று அவசரபடுத்தினார்.

  

மனோஜும் ஆர்வத்துடனே அவருடன் சென்றான்.

  

பெரிய கதவின் அருகே நின்று மெல்ல கதவை தட்டினார் சேஷாத்ரி...

  

“கம் இன்...” என்ற ஆண் குரல் வரவும், சேஷாத்ரி கதவை திறந்து உள்ளே சென்றார்.

  

மனோஜும் அவரை தொடர்ந்து சென்றான்.

  

“குமரன், ப்ளீஸ் மீட் மனோஜ்... நான் சொன்னேனே... நம்ம நியூ எம்ப்ளாயீ...” என்று சேஷாத்ரி அறிமுகம் செய்து வைத்தார்...

  

குமரன் புன்னகையுடன் கைக் குலுக்க கையை நீட்டினான்... ஆனால் மனோஜ் அவன் கையை கொடுக்கவில்லை... அவன் பார்வை குமரனிடம் இல்லை!!!!

  

அதே அறையில் குமரனுக்கு வலதுப் பக்கம் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து ஃபைலில் மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருந்த அமுதாவிடம் அவனின் மொத்த கவனமும் இருந்தது...

  

சேஷாத்ரி உள்ளே வந்தப் போது நிமிர்ந்து கூடப் பார்க்காத அமுதாவும், ‘மனோஜ்’ என்றப் பெயர் காதில் விழவும் நிமிர்ந்துப் பார்த்தாள்!

  

ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக எழுந்து நின்று, “மனோஜ்???” என்றாள்!

  

குமரன், சேஷாத்ரி இருவருக்கும் நடப்பது புரியவில்லை... சேஷாத்ரி மெல்ல மனோஜின் தோளில் தட்டினார்...

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.