(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

  

வினோதனுக்கும், தென்றல்வாணனுக்கும் புகாருக்கு பின்னணி தெரியும் என்பதால் மௌனமாக நின்றார்கள்.

 

“ஏ.ஸி சற்குணம் கூப்பிட்டு ஒரு தடவை பேசிடுங்க.”

 

“ஓகே சார்!”

  

***************

  

போன் செய்தா எடுக்க மாட்டீயா நீ?? இப்படி பொறுப்பில்லாம இருக்குறவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்ப?

 

போனில் அலறியது ஏ.ஸி யின் குரல். மறுபக்கம் தேன் எந்த பதற்றமும் இல்லாமல் இருந்தான்.

  

“ஒரு கேஸ் விசாரிச்சுட்டு இருந்தேன் சார். அதனால உடனடியா பேச முடியலை.”

 

“இன்ஸ்பெக்டர்ன்னா கேஸு இருந்துட்டே இருக்கும் அதுக்காக பேசாம இருப்பீயா?

 

“இன்னொரு தடவை இந்த மாதிரி நடக்காது சார்.”

  

“ஒரு சூசைட் கேஸ் நீ தானே விசாரிச்சுட்டு இருக்க? அந்தப் பொண்ணு பேரு கூட ரோஹினியோ, என்னவோ?

 

“ஆமாம் சார். வினோதன் விசாரிக்குறார். நான் உதவியா இருக்கேன்.”

 

“இரண்டுப் பேருமா ரொம்ப டார்ச்சர் செய்றீங்கன்னு புகார் மேல புகார் வருது. ராஜசுலோச்சனா மேடம் சமூகத்துல உயர்ந்த இடத்துல இருக்குறவங்க. அவங்க குடும்பத்தை எதுக்கு திரும்ப திரும்ப விசரிக்குறீங்க?

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.