(Reading time: 12 - 23 minutes)
Inspector Then
Inspector Then

ஜீப்பில் ஏறிய வினோதனும், தென்றல்வாணனும் சிறிது நேரம் தங்களுக்குள் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார்கள்.

  

“நீ என்ன நினைக்குற தேன்?”

  

“ஒரு கொலையை எப்படி மூடி மறைச்சுருக்காங்க!”

  

“கரக்ட்! ஆனால் நாம இப்போ கேட்ச்22 நிலமையில இருக்கோம். நடந்தது கொலைன்னு தெரியும். அதுக்கான ஆதாரமும் இருக்கு. இருந்தாலும் கிருஷ்ணன் அதை எடுத்து ப்ரைவேட்டா டெஸ்ட் செய்ததால எவிடன்ஸ் டேம்பர் செய்தோம்னு ஈஸியா முடிச்சிடுவாங்க.”

 

“நீ சொல்றது சரி. இந்த கேஸ்ல குற்றவாளியே கொலையை செய்ததா ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குறது தான் நமக்கு இருக்க ஒரே வழி.”

  

“யெஸ், எனக்கு அந்த திலீப் மேல தான் சந்தேகமா இருக்கு. அவனை பிடிச்சா தமிழ் பத்தி தெரியும், இல்லை தமிழை பிடிச்சா அவன் திலீப் கிட்ட பணம் கரக்குறதை பத்தி கண்டுபிடிக்கலாம்னு நினைக்கிறேன்.”

  

தென்றல்வாணன் யோசித்தான்!

 

“ராஜசுலோச்சனா பங்களால நாம இருந்தப்போ, அமிர்தா திலீப் கிட்ட பணம் பத்தி தான் கேட்டுட்டு இருந்தா. கட்டாயம் திலீப்க்கு இதுல தொடர்பு இருக்கு! அவனை நேரா போய் கேட்டு மிரட்டிப் பார்க்கலாமா தேன்?

  

“வேண்டாம் வினோதன்! திலீப் தான் இந்த கேஸ் விசாரிக்குறவங்களை மிரட்டுற ஆள்ன்னு நமக்கு தெரியும். அவனை போய் கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டான். டிஎஸ்பி வழியா கமிஷனர் கிட்ட பேசி தமிழை கண்டுபிடிக்க சொல்வோம். மீன் வைல் நாம இன்னும் கொஞ்சம் வேலை செய்யனும் வினோதன்...” என்ற தேன் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை விவரித்தான்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.