காட்டேஜ் வாசலில் விக்ராந்தின் வண்டி வந்து நின்றதும் உள்ளிருந்து மூவரும் இறங்கினார்கள், அதில் பல வருடங்கள் கழித்து அந்த காட்டேஜ்க்கு வந்த ராபர்ட்டோ உள்ளுக்குள் பயந்துக் கொண்டே வெளியே நல்லவன் போல நடித்துக் கொண்டு அந்த இடத்தையே சுற்றி முற்றி பார்த்தான், பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக அவன் கண் முன் வந்து சென்றது, 6 மாதங்கள் அந்த காட்டேஜில் தங்கி இருந்தானே, அந்த 6 மாத நினைவுகளும் மின்னல் வேகத்தில் ஒரு முறை வந்து சென்றது, அப்படியே அதை நினைத்து சிலை போல நின்றிருந்தவனை உலுக்கினான் ராகுல்
”என்ன அப்படியே நின்னுட்டீங்க, ஓ பழைய நினைவுகளை நினைக்கறீங்களா வாங்க உள்ள வாங்க, குழந்தைகள் உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்க” என சொல்ல முதலில் ராபர்ட்டுக்கு பயம் வந்தது, ஆனால் அடுத்த நொடியே அதை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே தலையாட்டி அவனுடன் வீட்டிற்குள் சென்றான்.
அந்நேரம் அபி சமையல் செய்துக் கொண்டிருக்க, ஹாலில் ராமலிங்கமோ சோபாவில் அமர்ந்தபடியே குழந்தைகள் விளையாடுவதை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தார், ராபர்ட் வரவும் அந்த குழந்தைகள் மகிழ்ந்தன, ஓடிவந்து அவனை அணைக்கவும் செய்தன.
முதலில் ராபர்ட் திகைத்தான், அதிர்ந்தான், பின் அமைதியாகி அனைவரையும் பார்த்து உடனே நடிக்கத் தொடங்கினான், நடிப்பென்றால் நடிப்பு அப்படியொரு நடிப்பு, பேய் குழந்தைகளால் கூட அவனது நடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை, அதில் அனைத்து பிள்ளைகளும் அவனிடம் நல்லவிதமாக பழகினார்கள்.
அந்த குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி, சோபியும் ஆடமும் ராபர்ட்டிடம் வந்து சைகையில் என்னென்னவோ சொல்ல அதை ராகுல் ராபர்ட்டுக்கு புரிய வைத்தான், ராபர்ட் வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி, அதனால் டிபன் அசத்தலாக செய்து அவனுக்கு தர அவரும் விரும்பி சாப்பிட்டார், அபியும் அவரிடம் கலகலவென பேசி சிரிக்க ராபர்ட்டுக்கு உள்ளுக்குள்
”ஓ இந்தளவு இவள் அழகா இருந்தா ஆன்டர்சனுக்கு ஏன் பிடிக்காது, இந்த வயசில அவனுக்கு இந்த சின்ன பொண்ணு கேட்குதா இருக்கட்டும் இருக்கட்டும், இங்க பேய் குழந்தைகள் இருக்கற விசயம் தெரியாம அவன் வரப்போறான், இவங்களே போதும் அவனை
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.