(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"பார்த்திபா, நீ ரொம்ப பேசிட்ட... இந்த மீட்டிங்கே தேவை இல்லை... நானும் ஏதோ பெரிய விஷயம்ன்னு நினைச்சு தப்பு செஞ்சுட்டேன்... விவேக் அன்னைக்கு நடந்ததுக்கு நான் பாரதி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்றேன்... உங்களுக்கு அது போதுமா?" என்றார்.

  

பாரதியின் பக்கம் ஒரு பார்வையை செலுத்தி விட்டு,

  

"இல்லை சார்... பரவாயில்லை... அதெல்லாம் வேண்டாம்..." என்றான் விவேக்.

  

"சரி, அப்போ இத்தோடு இந்த மீட்டிங் முடியட்டும்.... பாரதி... நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.... நீங்க மட்டும் வெயிட் பண்ணுங்க...." என்றார் விஸ்வநாதன்.

  

மற்றவர்கள் எழுந்து கிளம்பவும்,

  

"மிஸ்டர் விவேக், நீங்களும் உங்க அண்ணியும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா? உங்க கிட்டேயும் பேசனும்...." என்றார் விஸ்வநாதன்.

  

விவேக் உமாவை பார்க்க, அவள் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே தலை அசைத்தாள். விவேக் சிதம்பரத்திடம்,

  

"ஓகே சார்... ஒன்னும் பிரச்சனை இல்லை..." என்றான்.

  

"தேங்க்ஸ்... நான் பாரதி கிட்ட பேசிட்டு வரேன். நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ண முடியுமா?

  

"சரி சார்.... நாங்க வெளியே கார் பக்கத்தில் வெயிட் செய்கிறோம்..." என்றான் விவேக்.

  

கல்லூரி கட்டிடத்தை விட்டு வெளியில் வந்த விவேக்கிற்கு தன்னுடைய மன நிலை முழுமையாகப் புரியவில்லை. பார்த்திபனிடம் வலியுறுத்தி இப்படி பாரதியை பழி வாங்க நினைத்தது அவன் தான்... ஆனால் இப்போது தேவை இல்லாது சிறு பிள்ளைத் தனமாக நடந்து விட்டோம் என்று தோன்றியது... உமாவின் முகத்தை பார்க்கவே தயக்கமாக இருந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.