(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

கார்த்திக்கிற்கு  ஃபோன் செய்து உடனே கிளம்பி வரக் கூறினார்.

  

பின், டாக்டர் வருவதை பார்த்ததும், அவர் என்ன சொல்லப் போகிறார், என்று காத்திருந்தார் மாதவன்.

  

" மாதவன், சர்ஜரி செய்து தான் குண்டு வெளியே எடுக்கணும்,” என்று கூறினார்.

  

" உடனே சர்ஜரி செய்துடுங்க டாக்டர்." என்று கலங்கிய குரலுடன் கூறினார், மாதவன்.

  

அவர் கையை பிடித்துக் கொண்ட டாக்டர், "வி வில் டூ அவர் பெஸ்ட் , மாதவன்," என்றார் டாக்டர்.

  

பிறகு தன் வக்கீல்,  ஹரிஹரனை, ஆஸ்பத்திரிக்கு வரக் கூறினார் மாதவன்.

  

அப்போது மானஸாவை, ஆபரேஷன் தியேட்டருக்கு போக வெளியே கூட்டி வரவும், அவள் அருகில் சென்றார், மாதவன்.

  

அவளையே பார்த்துக் கொண்டு ஸ்டிரேச்சருடனே நடந்தார். அப்போது, கார்த்திக் உள்ளே வரவும், மான்சாவை பார்த்தான, அவள் தன் நினைவின்றி இருப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டு கொண்டே, அவளுடனேயே அவனும் நடந்தான்.

  

“அக்காவுக்கு என்ன ஆச்சு அத்திம்பேர்?” என்று கேட்டான் கார்த்திக் .

  

நடந்ததை கூறினார் மாதவன் நாயர்.

  

மிகுந்த கவலையுடன் சோகமாக அங்கேயே உட்கார்ந்தான் கார்த்திக்.

  

ஆபரேஷன் தியேட்டருக்கு அவளைக் கூட்டிச் சென்றவுடன், ஸ்டீபனுக்கு  ஃபோன் செய்தார், மாதவன்.

  

அவன் சொன்னதைக் கேட்ட  மாதவனின் கண்கள் செந்தனலாக சிவந்தது. உடம்பு விறைத்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.