(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 07 - பிந்து வினோத்

07. சொல்லாமல் என்னை எடுத்தாய்... பதிலாக உன்னைக் கொடுத்தாய்...

  

துமதி, கற்பகம் மற்றும் உமாவின் துணையோடு மறுநாள் நடக்க இருக்கும் தன் பிறந்தநாள் விழாவைப் பற்றி முமுர்மாக திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

  

நான் இன்வைட் செய்தவங்க எல்லோரும் வந்துருவாங்க அண்ணி. இரண்டு பேர் தான் டவுட்...”

  

அது யார் அது என் செல்ல ராஜக்குமாரி இன்வைட் செய்தும் வராதது...?” என்று தன் இளைய மகளை செல்லம் கொஞ்சினாள் கற்பகம்.

  

வரலைன்னு சொல்லலை அம்மா... சந்தேகம்னு தான் சொல்லி இருக்காங்க... பாரதி மேடமும், பவித்ரா மேடமும் ஏதோ வேலை இருக்குன்னு சொன்னாங்க...”

  

அவங்க இரண்டு பேரும் தானே செல்லம் உன்னுடைய ஃபேவரைட் லெக்சரர்ஸ்?”

  

ஆமாம் அம்மா...”

  

அந்தப் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்த உமா, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருந்த வரவேற்ப்பு பகுதியில் ஸ்ருதியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த விவேக்கைப் பார்த்தாள். உண்மையில், விவேக்கின் கவனமும் கூட இங்கே நடந்துக் கொண்டிருந்த பேச்சில் தான் இருந்தது.

  

ஒருவேளை உங்க பாரதி மேடம்க்கு உங்க அண்ணன் மேல இன்னும் கோபம் போகலையோ என்னவோ?” என்றாள் உமா புன்னகையோடு.

  

ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லை அண்ணி... அவங்க ஏதோ வேலை இருக்குன்னு தான் சொன்னாங்க...”

  

வேற எப்படி சொல்லுவாங்க, செல்லம்... உன் அண்ணன் என்னைத் திட்டுவார் அதனால வர முடியாதுன்னா?” என்றாள் கற்பகம் தன் பங்குக்கு கேலியாக!

  

கல்லூரியில் நடந்த கலாட்டாவைப் பற்றி உமா மேலோட்டமாக கற்பகத்திடமும் பகிர்ந்து

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.