(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இருந்தாள்.

  

ஸ்ருதியின் பேச்சை கேட்பதாக பாவனைச் செய்துக் கொண்டு, இங்கே நடந்த மூவரின் பேச்சில் கவனத்தை வைத்திருந்த விவேக்,

  

ஒரு நிமிஷம் ஸ்ருதி... மதுவோட பர்த்டே பார்ட்டி பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காங்க அதைக் கேட்போம், வா” என்று சொல்லி, ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு மற்ற மூவரும் அமர்ந்திருந்த ஷோபாவின் எதிரில் இருந்த சிறிய ஷோபாவில் அமர்ந்தான். ஸ்ருதியும் அருகில் இருந்த மற்றுமொரு சோபாவில் அமர்ந்தாள்.

  

என்ன அம்மா, என் தலை உருளுற மாதிரி இருந்தது...?” என்று விவேக் கேட்கவும்,

  

அது தானே பார்த்தேன்... என்னடா நம்ம விவேக் திருந்திட்டானோன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்...” என்று கிண்டல் கலக்க பதில் சொன்னாள் கற்பகம்.

  

அவளின் தோழியின் மகளான ஸ்ருதியை விவேக்கிற்கு மணம் முடிக்க வேண்டும் என்ற ஆவல் கற்பகத்திற்கு இருந்தது. விவேக்கிடம் அதைக் குறித்து நேரடியாக பேசிய பிறகும் ஒரு பயனும் இல்லை. ஆம் என்றும் சொல்லாது, இல்லை என்றும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருந்தான் அவளின் இளைய மகன்!

  

மதுவோட பர்த்டே விட வேற என்ன முக்கியமான விஷயம் இருக்க முடியும் ம்மா...?”

  

நீங்க அவ்வளவு நல்ல அண்ணனா இருந்தா, இந்நேரம் நீங்களே ப்ளான் செய்து எல்லாம் தயார் செய்து வச்சிருக்கனும்!” என்றாள் உமா.

  

சாரி அண்ணி, சரியா இந்த நேரத்தில் வேலை வந்திருச்சு... இருந்தாலும், லேட்டா ரெடி செய்தாலும், நம்ம மதுவோட பார்ட்டியை ஜமாய்ச்சிடலாம்... அண்ணாவும், அப்பாவும் கூட நாளைக்கு லீவ் தான்...”

  

அடடா!!! நாளைக்கு புயல் அடிக்கப் போகுது, மழைக் கொட்டப் போகுது...” என்று கற்பகம் இப்போதும் கிண்டல் செய்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.