(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

ஏன் ஆன்ட்டி அப்படி சொல்றீங்க? அங்கிள் வீட்டில் இருப்பது அவ்வளவு அபூர்வமா?” எனக் கேட்டாள் ஸ்ருதி.

  

அங்கிள் மட்டும் இல்லை, ஸ்ருதி, இந்த வீட்டில் இருக்கும் மூன்று ஆண்களுமே வீட்டில் இருப்பது ரொம்ப அபூர்வம்...” என்று அவளுக்குப் பதில் சொன்னாள் உமா.

  

ஓஹோ...”

  

அது நிஜம் தான், ஸ்ருதி! ஆனால், விவேக் மட்டும் நாம சொன்னால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்குற டைப்... மற்ற இரண்டுப் பேர் அளவுக்கு இவன் மோசம் இல்லை...” என்றாள் கற்பகம்.

  

கற்பகம் செய்ய விரும்புவதை புரிந்துக் கொண்ட விவேக், பேச்சை மாற்ற,

  

அம்மா, அதை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்... இப்போ யாரோ பார்ட்டிக்கு வரலைன்னு பேச்சு இருந்ததே, அது என்ன?” என்று வினவினான்.

  

வரலைன்னு இல்லை அண்ணா, வரது சந்தேகம்னு பாரதி மேடம் சொன்னாங்க...” என்று அவனுக்கு பதில் சொன்னாள் மதுமதி.

  

ம்ம்ம்ம்... அவங்க வரலைன்னா எல்லோருமா சேர்ந்து அந்தப் பழியையும் என் தலையில் போட்டுருவீங்க...!!!! ஏன் அண்ணி, உங்களுக்கும் தானே அவங்களை தெரியும், ஒரு போன் செய்து நீங்களும் இன்வைட் செய்ய வேண்டியது தானே? மதுவுக்காக இல்லைன்னாலும், நீங்க வேலை மெனக்கெட்டு கூப்பிடுறதுக்காகவாவது கட்டாயம் வருவாங்க...”

  

உமா யோசிக்கவும்,

  

நல்ல ஐடியா அண்ணா... அண்ணி, அண்ணி ப்ளீஸ் பேசுங்க அண்ணி... ப்ளீஸ்...” என்று அவளை தொல்லை செய்தாள் மதுமதி!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.