(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

வாங்கிட்டு வரேன்...” என்று நிரஞ்சன் நகர்ந்து சென்றான்.

  

வாங்க, நாம அப்படி போய் உட்காரலாம்...” என்றாள் உமா.

  

அவசரமாக கடிகாரத்தை பார்த்த பவித்ரா, இன்னும் நேரம் இருப்பதை உணர்ந்துக் கொண்டு, சரி என ஏற்றுக் கொண்டு உமாவுடன் சென்றாள்.

  

பாரதி எதுவும் சொல்லாது அவர்கள் இருவரையும் தொடர்ந்தாள்.

  

மூவரும் காலியாக இருந்த ஒரு மேஜை அருகில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். பாரதி நித்யாவை உமாவிடம் இருந்து வாங்கி செல்லம் கொஞ்ச துவங்கினாள்.

  

ஏன் பாரதி, உங்களுக்கு குழந்தைன்னா ரொம்பப் பிடிக்குமா?” என்று வினவினாள் உமா.

  

முகத்தில் புன்னகை மின்ன, “ம்ம்ம்... ஆமாம்...” என்று சுருக்கமாக பதில் சொன்னாள் பாரதி.

  

பவித்ரா,

  

நல்ல கேள்வி கேட்டீங்கப் போங்க... இவ என் வீட்டுக்கு வந்தால் என் பொண்ணு என் பக்கத்தில கூட வர மாட்டா...” என்றாள்...

  

பவி சொல்றதை எல்லாம் நம்பாதீங்க... நான் போற டைம்ன்னு இல்லை, மத்த நேரத்திலேயும் நித்திலா அவங்க பாட்டி செல்லம் தான்... அம்மாக்கு அப்பாவை கவனிக்கவே நேரம் போதாது... இதில குழந்தைக்கு எங்கே டைம்?”

  

மானத்தை வாங்காதே, பாரு...”

  

அவர்கள் இருவரின் பேச்சை கவனித்து சிரித்த உமா,

  

பாரதி, உங்களுக்கு குழந்தைங்க ரொம்ப பிடிக்கும்னா, கல்யாணம் செஞ்சு உங்களுக்கே உங்களுக்கா ஒரு குழந்தைப் பெத்துக்க வேண்டியது தானே?” என்றாள் விளையாட்டாக!

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.