(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தாங்கள் இருக்கும் மேஜையின் அடையாளத்தைச் சொன்னாள்.

  

சில நிமிடங்களில் அங்கே வந்த சேர்ந்த இளைஞன் பிரபுவிடம் குறை சொல்லுமாறு எதுவும் இல்லை. பார்க்க நன்றாக தான் இருந்தான். பொதுவான அறிமுகத்திற்கு பிறகு, பாரதியிடம் தனியாக பேச வேண்டும் என்று அவன் சொல்லவும், மாலை சுற்றி பார்த்தப் படி பேச சொல்லி பாரதியை அவனுடன் போக சொன்னாள் பவித்ரா. தோழியை ரகசியமாக பார்த்து முறைத்துக் கொண்டே நிரஞ்சன் மற்றும் உமாவிடம் விடைப் பெற்றுக் பிரபுவுடன் கிளம்பினாள் பாரதி.

  

பாரதி செல்வதை சில வினாடிகள் பார்த்தப் படி இருந்த பவித்ரா, பின் உமா பக்கம் திரும்பி,

  

அவங்க வரும் வரைக்கும் நான் இங்கே தான் இருக்கணும்... நீங்க ரெண்டு பேரும் எனக்காக உங்க டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்... உங்க அனிவேர்சரி வேற... கிளம்புறீங்கன்னா கிளம்புங்க... எனக்காகன்னு எல்லாம் வெயிட் செய்ய வேண்டாம்...” என்றாள்.

  

சரி கிளம்பலாம் என்பதுப் போல் நிரஞ்சன் எழ முயற்சிக்க, உமா, கிளம்ப எந்த அவசரமும் காட்டவில்லை.

  

இருக்கட்டும் பவித்ரா, நீங்க தனியா தானே இருக்கணும்... நாங்க இருந்தா உங்களுக்கு துணையா இருக்கும்...”

  

நிரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை. தனியாக நேரம் செலவிட என்று அவனை அடம் பிடித்து அழைத்து வந்தது அவனின் மனைவியே தான்... இப்போது ஏன் இங்கேயே இருக்கிறாள்... புரியாமல் கேள்வியுடன் மனைவியைப் பார்த்தான்... அதை எதிர்பார்த்திருந்ததுப் போல, ‘பிறகு சொல்கிறேன்’ என உமா கண்களால் அவனுக்கு செய்தி சொல்லவும் அமைதியாக இருந்தான்.

  

உமா பவித்ராவுடன் பேச்சைத் தொடர்ந்தாள்...

  

ஸோ, பாரதி எந்த மாதிரி பெர்சனாலிட்டி எதிர்பார்க்கிறாங்க, பவித்ரா?”

  

யாருக்கு தெரியும்ங்க உமா? அவ வாயைத் திறந்து ஏதாவது சொன்னால் தானே... இங்கேயே நானும் அத்தையும் ரொம்ப கம்பல் செய்ததால் தான் வந்தாள்... பார்ப்போம் இந்த பிரபுவை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.