(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

திரும்பி,

  

உன் ஆள் இன்னும் அஞ்சு நிமிஷத்தில இங்கே இருப்பாராம்...” என்றாள்.

  

பாரதி பதில் எதுவும் சொல்லவில்லை. உமாவிற்கு அது என்ன ‘உன் ஆள்?” என்னும் கேள்வி மண்டையைக் குடைந்தது. கேட்காமல் இருக்க இயலாது என முடிவு செய்து,

  

அது என்ன பவித்ரா உன் ஆள்?” என்றாள் ஆர்வத்தோடு!

  

தன் மனைவி இப்படி மற்றவர் சொந்த விஷயத்தில் தலை இடுவதை அதிசயமாக பார்த்து விட்டு,

  

இது என்ன கெட்ட பழக்கம், உமா...” என்றான் நிரஞ்சன்.

  

சொல்ல முடியாததா எதுவும் இல்லை சார்... உமா, பாரதிக்கு ஒரு அலையன்ஸ் பார்த்திருந்தோம், பொது இடத்தில மீட் செய்தால் நல்லா இருக்கும்னு சொன்னாரா, அது தான் அவளை கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன்...” என்றாள் பவித்ரா.

  

ஓ!”

  

உமாவின் அந்த ஆச்சர்யம் கலந்தக் குரலில் இருந்த எதுவோ மற்ற மூவரையுமே ஆச்சர்யப் பட வைத்தது.

  

என்ன ஆச்சு உமா?” என்றாள் பவித்ரா.

  

இல்லை, இவ்வளவு நேரம் பாரதி கல்யாணம் பத்தி பேசிட்டு இருந்தோம் நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே...???”

  

சொல்லனும்னு தான் இருந்தேன்...”

  

பவித்ரா பேசி முடிக்கும் முன் அவள் கைப்பேசி மீண்டும் அலறியது. எடுத்துப் பேசியவள்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.