(Reading time: 14 - 27 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

போது நானே உங்க கிட்ட சொல்றேன்...."

  

"இந்து, இன்னொரு முறை உன்னை நான் கட்டாயப் படுத்த மாட்டேன்...ஆனாலும் அம்மாவா நான் சும்மா இருக்க முடியாது இல்லைடா... உனக்கு பிடிச்சா மட்டும் தான் அடுத்த ஸ்டெப் ஓகே வா?"

  

அன்னையின் கொஞ்சலில் மனம் இறங்கியவளாய்,

  

"சரி அம்மா" என்றாள்.

  

***********

  

தூக்கம் கலைந்து எழுந்த சஞ்சீவ், கடிகாரத்தில் நேரம் 7.30 என்று பார்த்தவன், ஹார்ட் அட்டாக் வராத குறையாக அதிர்ந்தான். அவன் இப்படி காலையில்(!) தேவை இல்லாது எழுந்ததே இல்லை. கண்களை மூடி தூங்க சில நிமிடங்கள் முயன்றவன், எதையோ சிந்தித்தவனாய் படுக்கையில் இருந்து எழுந்தான். பல் துலக்கி விட்டு, கிழே வந்தவன், நேராக சமையலறைக்கு சென்றான். அங்கே கீதாவும் கலாவும் மும்முரமாக சமையலில் ஈடு பட்டிருந்தனர். கலாவின் தாய் கமலா இங்கு முன்பு சமையல் வேலை செய்துக் கொண்டிருந்தவர். திடீரென்று பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி போனார். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த கலா படிப்பை தொடரவும், அன்னையை கவனித்துக் கொள்ளவும் காஞ்சனா உதவினார். சென்ற ஆண்டு கமலா காலமாகவும், காஞ்சனா கலாவை தங்கள் வீட்டிலேயே தங்க அழைத்து வந்து விட்டார். கலா தற்போது பி எஸ்சி முடித்து விட்டு ஏதேனும் வேலையில் சேர முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

  

சஞ்சீவை பார்த்த கீதா ஆச்சர்யப்பட்டாள்.

  

"என்ன சஞ்சீவ் இது அதிசயம்????? உங்க கடிகாரம் தப்பா ஏதாவது ஓடுதா என்ன?"

  

"போதும் அண்ணி... கிண்டல் எல்லாம்... ஏதோ இவ்வளவு நாள், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு லேட்டா தூங்கி எழுந்தேன்... ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க?"

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.