Page 5 of 7
“ஓகே சார்.”
இன்ஸ்பெக்டரின் கார் கிளம்பி சென்றப் பிறகு மீண்டும் டீக்கடைக்கு வந்தான் அபினவ்.
“விஜயன் டீ ரெடி ஆச்சா??? அடுத்து நாம ரோந்து போகனும், சீக்கிரம் வாங்க.”
அஹல்யா, கிளி, ஜோசியக்காரன் அனைவரையும் மறந்து கடமை வீரனாக கிளம்பினான் அபினவ்.
🌼🌸❀✿🌷
க்கி க்கி க்கி க்கி!
பாத்திரம் துலக்கி கொண்டிருந்த சத்யா அழைப்பு மணி திக்கி திணறி சத்தம் போடவும் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு கையை கழுவினாள்.
அதற்குள் அழைப்பு மணி பலமுறை அழுத்தப் பட்டு,
க்கி க்கி க்கி க்கி,
க்கி க்கி க்கி க்கி,
க்கி க்கி க்கி க்கி,
என அலறியது.
“அப்படி என்ன தலைப் போற அவசரம்?”
கோபமாக கேட்டப்படி கதவை திறந்த சத்யா, கதவின் மறு பக்கத்தில் நின்ற பெண்ணை அதிசயமாக பார்த்தாள்.