(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சக்தியின் டீஷர்ட்டில் இருந்த வார்த்தைகளை படித்து கண்களை விரித்தாள் சத்யா.

  

“Quote சரியா இருக்கே சக்தி! உங்க கனவு சூப்பர்”

  

“கனவா?”

  

சத்யா லேப்டாப் திரையை அவளிடம் காட்டினாள்.

  

“ஆறடி உயரம், மீசை, மஸ்குலர் பில்ட்!!! சூப்பர், சூப்பர்!”

  

சக்தியின் முகத்தில் இருக்கும் கடினத் திரை விலகி மென்மை எட்டிப் பார்த்தது.

  

“அது அந்த மாதிரி இல்லை சத்யா. நான் சொன்னேனே கவிதை, அதை எழுதினது இவன் தானாம். பாட்டி காணாம போன அந்த பையனோட போட்டோ வச்சிருந்தாங்க.”

  

“நான் கூட தான் அந்த போட்டோ பார்த்திருக்கேன். பதினஞ்சு வருஷம் கழிச்சு அவன் எப்படி இருப்பான்னு பார்த்தா பரவாயில்லை. நீங்க ஏன் இப்படி மீசை ஸ்டைல், சைஸ் எல்லாம் எக்ஸ்ட்ராவா சேர்த்து வச்சுப் பார்த்தீங்க?”

  

“பொழுது போகலைன்னு செஞ்சேன்.”

  

“இதனால தான் பொண்ணுங்களுக்கு காலா காலத்துல கல்யாணம் செய்து வைக்கனும்னு பெரியவங்க சொல்றாங்க. உங்க அப்பா அம்மாக்கு போன் போட்டு சொல்றேன் இருங்க."

  

“சொல்லுங்க! கண்டுக்கவே மாட்டாங்க. சக்தியா, யாருன்னு கேட்பாங்க.”

  

சக்தி சொன்ன விதம் சத்யாவின் மனதை தொட்டது.

  

“அவங்க கண்டுக்காம இருந்தா என்ன? நான் கண்டுப்பிடிக்குறேன். இங்கே நீங்க ஆசைப் பட்டு  போட்டு இருக்க மாதிரியே ஒருத்தரைக் கண்டுப் பிடிக்குறேன்.”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.