(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”நீ தீர்வு சொல்ல வந்துட்டியா, உன்னை இந்த ஊரை விட்டு போக விட்டாதானே, நீ இங்கதான் இருக்கனும் அதெப்படி நான் மட்டும் 7 முறை என் கல்யாணம் நின்னு கஷ்டப்படனும், நீ மட்டும் உன் ஆசைப்பட்டபடி சந்நியாசி ஆகி சந்தோஷமா இருக்கனுமா விடமாட்டேன்”

  

”ஆனா நான் எந்த தப்பும் செய்யலையே”

  

”எனக்கு நடந்த அநீதிக்கு நீதான் காரணம்”

  

”நானா வந்து உன் கல்யாணத்தை நிறுத்தலை”

  

”ஆனா உன் பேரை சொல்லித்தான் என் கல்யாணம் நின்னது, அதுக்கு நீ என்ன சொல்லப்போற”

  

”இதுக்கு என்ன சொல்றது, என்னால உன்கிட்ட மன்னிப்புதான் கேட்க முடியும் என்னை மன்னிச்சிடு”

  

”பத்தாது செய்றது செய்துட்டு நீ மன்னிப்பு கேட்டா நடந்தது சரியாயிடுமா, 7 முறை கல்யாணம் நின்னப்ப நான் பட்ட கஷ்டம், அவமானம் எல்லாம் போயிடுமா என்ன”

  

”சரி உனக்கு பிடிச்ச பையனை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் போதுமா”

  

”எனக்கு அப்பா இருக்காரு, நான் ஒண்ணும் அநாதையில்லை, அவரு எனக்கு கல்யாணம் செய்து வைப்பாரு, நீ ஒண்ணும் எனக்கு நல்லது செய்யத் தேவையில்லை”

  

”சரிம்மா தாயே இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்ற”

  

”என்னது தாயேவா”

  

”ஷ்ஷ் சரி உன் பேரு கூட எனக்கு தெரியலை ஆமா உன் பேரு என்ன”

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.