நீதான் என் முறைபையன்னும் உன்னைதான் நான் கல்யாணம் செய்துக்கனும்னு இந்த ஊரே நினைக்குது, நாளைக்கே நீ இறந்துட்டா ஊர்க்காரங்க என்னை வாழவிடுவாங்களா, கொல்லாம கொன்னுடுவாங்க, அதுக்கு பதிலா யாருக்கும் பிரச்சனை வராம நானே என்னை மாய்ச்சிக்கலாம்” என சொல்ல அதைக்கேட்டு துடிதுடித்துப் போனான் கொம்பன்
என்னதான் அரைமணி நேரத்திற்கு முன் பார்த்த முறைப்பெண் என்றாலும் தன்னால் ஒரு பெண் இறக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் கொம்பன்.
”வேணாம் அப்படி செய்யாத” என படபடக்க அவளோ
”எதுக்கு பயப்படற நான் செத்தா உனக்கென்ன நீதான் சந்நியாசியா ஆகப் போறியே”
”ஒரு உசுரோட மதிப்பு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும், அநியாயமா எனக்காக நீ சாகக்கூடாது”
”அப்படியா அப்போ எனக்காக நீ என்ன செய்வ”
”என்ன செய்யனும் கட்டளையிடு, உடனே செய்றேன்” என சொல்ல அவளோ அருவாளை எடுக்காமலே இன்னொரு கையில் இருந்த தாலியை அவன் முன்னால் காட்டி
”இந்த தாலியை என் கழுத்தில கட்டு” என்றாள் தெள்ளத் தெளிவாக அதைக்கேட்டு அங்கிருந்த அனைவருமே விக்கித்துப் போனார்கள். கொம்பனும் ஒரு நொடி மிரட்சியுடன் அவளைப் பார்த்து சட்டென அந்த அருவாளை விலக்கியவன்
”உனக்கென்ன புத்திகித்தி கெட்டுப் போச்சா என்ன பேசற நீ”
”இப்பதானே நீ சொன்ன, கட்டளையிடு உடனே செய்றேன்னு, எதுக்கு என்னை கேள்வி கேட்கற, நான் சொன்னதை செய் ம் என் கழுத்தில தாலியை கட்டு” என சொல்லிக் கொண்டே மீண்டும் அவனது கழுத்தில் அருவாளை வைத்தாள். அவனோ நொந்துப் போனான்