"எனக்கு நிறைய பேசனும் இந்து..." என்றான்.
"சொல்லுங்க..."
"ஒரு மாசமா என்னோட வாழ்க்கையே தலைகீழே மாறிப் போயிடுச்சு... இப்படி எல்லாம் நான் மாறுவேன்னு நான் கனவிலேயும் நினைக்கலை... என்னோட லைஃப் உங்க... உன்னுடையது போல் இல்லை..."
இந்து அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். சற்று முன் மனதில் உறுத்தியது என்ன என்பது அவளுக்கு இப்போது புரிந்தது. சஞ்சீவ் மரியாதை பன்மையில் இருந்து மாறி பேசியது தான் அது...
இந்துவின் பார்வைக்கான காரணம் புரிந்துக் கொண்டவனாக,
"நான் இப்படி நீ வான்னு பேசுறது பிடிக்கலைன்னா..." என்று சஞ்சீவ் சொல்லும் போதே, அவன் பேச்சில் குறுக்கிட்டு,
"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க..." என்றாள் இந்து!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...