(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

26. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்துவை ஒரு பார்வை பார்த்து விட்டு, சஞ்சீவ் தன் பேச்சை தொடர்ந்தான்...

  

"எங்க அப்பா சின்ன வயசிலேயே இறந்துட்டார்... அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... என் அம்மாவோட நான் ரொம்ப க்ளோஸ் எல்லாம் இல்லை... அண்ணாக்கும் எனக்கும் நடுவில கூட ஒரு நல்ல உறவு இன்னைக்கும் இருக்கு, ஆனால், அதுவும் ரொம்ப க்ளோஸ் ரிலேஷன்ஷிப் அப்படின்னு சொல்ல முடியாது... அதனால தான் அண்ணா அண்ணி கல்யாண டைமில நடந்த பிரச்சனையில கூட நான் ரொம்ப இன்வால்வ் ஆகலை.... ஆனால் இப்போ எங்க வீடே ரொம்ப மாறிப் போய் இருக்கு... நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி இருந்த வீட்டுக்கும், இப்போ இருக்கிற வீட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அப்போ நாங்க மூணு பேர் இருந்தாலும்... யார் எங்கே இருக்காங்க... சாப்பிட்டாங்களா எதுவும் தெரியாது... ஆனால் இப்போ அண்ணி வந்த பிறகு எங்க எல்லோர்குள்ளேயும் ஒரு பிணைப்பு வந்திருக்கு... நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாங்க குடும்பமா ஒண்ணா இருந்து சாப்பிடுறது... சின்ன விஷயங்களை கூட மத்தவங்களோட பகிர்ந்துக்குறது இப்படி நிறைய... ரொம்ப சந்தோஷமா இருக்கு... நீ அன்னைக்கு அம்மா பத்தி சொல்ற வரைக்கும் என் அம்மாவை நான் ஒரு அம்மாவா மட்டும் இல்லை, மனுஷியாவே மதிச்சதில்லை தான்... அவங்க என்னை பொறுத்த வரைக்கும் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்க இருக்குறவங்க... அண்ணாக்கு முன்னாடியே அம்மாவை பத்தி புரிஞ்சு தான் இருக்கு... எனக்கு தான் புரியலை...இப்போ கொஞ்ச நாளா என் மனசில ஒரு பிளான் இருக்கு..."

  

"சொல்லுங்க..."

  

"நான் இப்போ மேனேஜ் செய்ற ஹாஸ்பிட்டல அம்மாவையே கவனிக்க சொல்லிட்டு நான் என் ஃப்ரென்டோட சேர்ந்து புது collaboration ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன்... நிறைய ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், கிளினிக்ஸ் கிட்ட எல்லாம் பேசி அவங்களை நம்ம க்ரூப்ல சேர்த்துட்டு, அவங்களை நம்ம பேரிலேயே சர்வீஸ் செய்ய சொல்லனும்... ப்ராஃபிட் ரேஷியோ என்னன்னு முடிவு பண்ணிக்கலாம்... இன்வெஸ்ட்மென்ட் கொஞ்சம் நிறைய தேவைப்படும் தான்... என் ஃப்ரென்ட் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்கான்... அவன் ஸ்லீப்பிங் பார்ட்னரா இருப்பான்..."

  

"நல்ல ஐடியா தான்... இப்போ இந்த மாதிரி நிறைய ஹாஸ்பிட்டல் செயின்ஸ் இருக்கு தானே...

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.