(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அதுக்காக நீ இப்படியே இருந்துடாதடா ஒன்று ரெண்டு சமையல் செய்ய கத்துக்க“

  

”ஷ்ஷ் யப்பா நான் ஆம்பளைப்பா, சமையல்காரன் இல்லை” என கர்ஜிக்க காவேரியோ அறையில் இருந்து மீண்டும் காபி என சத்தமாக சொல்ல கடுப்பானான் கொம்பன்

  

”இவளை” என பொங்க

  

”டேய் இரு எதுக்கு இப்படி பொங்கற”

  

”அவளோட கொழுப்பை பார்த்தீங்களா, படுக்கையில இருந்துக்கிட்டே காபின்னு கத்தறா காபி என்ன அதுவா நடந்து வருமா என்ன“

  

”வராது அதுக்குதான் நீயிருக்கியே இந்தா காபி டம்ளரை பிடி, போ போய் அவள்கிட்ட கொடு“ என அவனிடம் காபி டம்ளரை திணிக்க அவனோ அதிர்ந்தான்

  

”அப்பா என்ன நீங்க என்னை அவளுக்கு வேலைக்காரனாக்கறிங்க”

  

”இதுல ஒண்ணும் தப்பில்லைடா, புருஷன் பொண்டாட்டிக்குள்ள பாகுபாடு இருக்க கூடாது, நீ நான்ங்கற பிடிவாதம் இருக்க கூடாது, நீ அவளுக்காக இதெல்லாம் செய்தா உங்களுக்கு நடுவில ஒரு அன்னியோன்யம் பிறக்கும், இதெல்லாம் திருமண வாழ்க்கையில சகஜம் கொம்பா, அய்யோ உங்கம்மா உன்னை என்னத்த வளர்த்தாளோ இன்னும் ஒண்ணும் தெரியாத புள்ளையாவே இருக்கியே, நாளைக்கு பின்னாடி எப்படி இந்த வீட்ல நீ வாழப்போறியோ”

  

”அப்பா என்னால எல்லாம் இங்க இருக்க முடியாது, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்““

  

”அப்ப உன் பொண்டாட்டி”

  

”அவள் வந்தா வரட்டும் வராட்டி இங்கயே வாழாவெட்டியா இருக்கட்டும் எனக்கென்ன“

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.