(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”சே கல்நெஞ்சுக்காரா, கல்யாணம் ஆகி கொஞ்ச நேரம் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி அபசகுனமா பேசறியே, வாயாடா இது, வாயைக் கழுவு, உனக்கு கல்யாணம் ஆகி சந்தோஷமா வாழ்ந்து எங்களுக்கு பேரன் பேத்தியை தருவேன்னு பார்த்தா சே இப்படி பேசி வைக்கிறியே மனுஷனாடா நீ” என திட்ட அவன் நொந்துப் போய் பேச வாய் திறக்கும் போது காபி என காவேரியின் குரல் அதிகமாக கேட்க அவன் கடுப்பாகி காபியுடன் அவசரமாக அறைக்குள் நுழைந்து அவளைப் பார்த்தான்.

  

இன்னும் கண்கள் திறவாமல் தூக்க கலக்கத்தில் இருந்தவளைக்கண்டு ஆத்திரமடைந்தான்

  

”அடியேய் முறைபொண்ணே எழுந்து தொலை” என கத்த அதில் திடுக்கிட்டு கண்கள் திறந்துப் பார்த்து கொம்பனை கண்டதும்

  

”சீய் நீயா” என அலுத்துக் கொள்ள அவனுக்கு ஒரு மாதிரியாகிப் போனது

  

”ஏன் வேற யாரை எதிர்பார்த்த சொல்லு அனுப்பி வைக்கிறேன்“

  

”அடப்பாவி நீ புரோக்கர் வேலை கூட செய்வியா சீ சீ, உன்னை போய் ஊர்காரங்க நல்லவன்னு சொல்றாங்களே”

  

”கொழுப்புடி உனக்கு, பெரிய மகாராணின்னு நினைப்பு காபி கூட நீ வந்து போட்டு குடிக்க மாட்டியா, உனக்காக நான் காபி கொண்டு வரனுமா” என கேட்க அவளோ ஆச்சர்யப்பட்டு அவனது கையில் இருந்த காபியை பார்த்து வியந்தாள்

  

”அட எனக்காக காபி போட்டு கொண்டு வந்தீங்களா” என ஆர்வமாக கேட்க

  

”அது ஒண்ணுதான் பாக்கி, அதையும் செய்ய வைச்சிடாத”

  

”அப்ப இந்த காபி”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.