(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“இப்படி அ சார், இ சார்ன்னு எல்லாம் சொல்லாம அபினவ்ன்னு கூப்பிடுங்க.”

  

“அபினவ்!” கனவின் நடுவே பேசுபவளைப் போல அழைத்தாள் அஹல்யா.

  

“இது கரக்ட்! சொல்லு அஹல்யா.”

  

“உங்க கிட்ட சொல்லலாமான்னு தெரியலை அபினவ். என் வாழ்க்கையில நான் சந்திச்ச நிறைய ஆண்கள் நல்லவங்களா இல்லை.”

  

“நான் எதையுமே சொல்ல சொல்லி உன் கிட்ட கேட்கலை அஹல்யா. நீ சொல்லலைனா பரவாயில்லை. நம்ம கல்யாணத்துக்கு உன் சம்மதத்தை சொல்லு போதும்.”

  

“எனக்கு புரியலை அபினவ். உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க. ஏன் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறீங்க?”

  

“என்ன அஹல்யா அநியாயம் செய்ற? எவ்வளவு பேர் இருந்தாலும் ஒருத்தன் ஒருத்தியை தானே கல்யாணம் செய்துக்க முடியும்?”

  

“அது தான் ஏன்?”

  

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அஹல்யா. காரண காரியம் எல்லாம் சொல்ல தெரியலை.”

  

“என்னை பத்தி எப்படி எல்லாமோ நிறைய பேர் பேசுறாங்க.”

  

“வேலை இல்லாதவங்க நேரத்தை ஓட்ட என்ன வேணா செய்வாங்க. அதை எல்லாம் நான் மதிக்குறது இல்லை.”

  

“அவங்க சொல்றது உண்மையாவும் இருக்கலாமே?”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.