(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இவன் மாறலைங்க கையில சூடு வைச்சும் இவன் திருந்தலை“

  

”அப்படி என்ன செய்தான்”

  

”என்ன செஞ்சானா என் மருமகள்கூட வாழறதுக்கு பதிலா அவளை முக்தியடைஞ்சிடுன்னு சொல்லி வைக்கிறான், எவ்ளோ இருக்கனும் இவனுக்கு அவனை பிடிங்க இன்னொரு கையில சூடு வைச்சாதான் அடங்குவான்” என சொல்ல அவ்வளவுதான் கொம்பனை பிடிக்கலானார் இதில் கணக்கு பிள்ளை வந்தான் அவனுக்கு விவரமே தெரியாது ஆனாலும் கொம்பனின் தாய் சொன்ன கட்டளையை மதித்து கொம்பனை பிடித்து வைத்தான்

  

”டேய் பாவி நீயாடா உயிர் நண்பன் எதுக்குடா என்னை பிடிச்சி வைக்கற விடுடா என்னை“

  

”நண்பா நீ என் உயிர் நண்பன்தான் ஆனாலும் உங்கம்மா எனக்கும் அம்மாதானே, அம்மாவோட கட்டளையை மீறி நடக்கறது தப்பு, அந்த தப்பை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன்” என சொல்லி முடிக்க கொள்ளி கட்டையுடன் வந்தார் கொம்பனின் தாயார் அதைக்கண்டு கணக்குபிள்ளை அதிர்ந்தான்

  

”எதுக்கு இப்படி வர்றாங்க”

  

”ம் எனக்கு சூடு வைக்க“

  

”சூடு வைக்கற அளவுக்கு நீ என்ன தப்பு செய்த“

  

”ஒரு தப்பும் செய்யலை என் முறைப்பொண்ணை முக்தியடைஞ்சிடுன்னு சொன்னேன் அதுக்கு தண்டிக்கிறாங்க”

  

”உனக்கு ஆனாலும் இவ்வளவு இவ்வளவு ஆகாது, நேத்துதான் கல்யாணம் ஆச்சி, அதுக்குள்ள உன் பொண்டாட்டியை சாவ சொல்றியே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.