(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”டேய் புரியாம பேசாதடா என்ன நடந்ததுன்னு அப்புறமா சொல்றேன் முதல்ல என்னை விடுடா“

  

“முடியாது கொம்பா” என சொல்லும் போதே கொம்பனின் தாயார் வர குறுக்கே வந்து தடுத்தாள் காவேரி

  

”வேணாம் அத்தை தப்புக்கு தண்டனை சூடு வைக்கறது இல்லை சூடு வைச்சா அவர் மாறிடுவாரா என்ன அவரா மாறினாதான் உண்டு அவரை விட்டுடுங்க அத்தை” என கைகூப்பி கெஞ்ச அதில் அவரும் சாந்தமாகி தன் மகனிடம்

  

”பார்த்தியாடா எவ்ளோ தங்கமான பொண்ணா இருக்கா, இப்படி ஒருத்தி கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கனும், தங்கத்தை கூட தகரமா பார்க்கறியே உன் கண்ல கோளாறு இல்லை உன் புத்தியிலதான் கோளாறு இருக்கு, திருந்தற வழியை பாரு” என சொல்ல அவனோ பொம்மை போல தலையை ஆட்டினான்.

  

”அம்மாடி மருமகளே வாம்மா டிபன் ரெடியாயிடுச்சி சாப்பிடுவ” என அழைக்க அவளோ கொம்பனை பார்த்தாள். அதைக் கண்ட கணக்குபிள்ளையோ

  

”கொம்பா அங்க பாரு உன் முறைபொண்ணு உன்னையே பார்க்குது நீ என்னடான்னா தலை குனிஞ்சிருக்க தலையை தூக்கு கொம்பா”

  

”அவள் என்னைப் பார்த்தாலே எனக்குதான் பிரச்சனை வருது, நான் இப்படியே தலைகுனிஞ்சிருக்கேன்”

  

”ப்ச் எப்படியிருந்த நீ இப்படியாயிட்டியே”

  

”என்னை இப்படி ஆக்கினதே அவள்தானே இன்னுமா அவள் என்னை பார்க்கறா”

  

”ஆமாம் கொம்பா வைச்ச கண்ணு வாங்காம பார்க்கறாளே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.