(Reading time: 36 - 72 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”என்ன கொம்பா பசிக்குதா” என நக்கலாக கேட்க அவனோ

  

”எனக்கென்ன ஒரு வேளை சாப்பிடலைன்னா நான் ஒண்ணும் குறைஞ்சிட மாட்டேன்”

  

”அப்படியா சரி பட்டினியாவே கிட எனக்கென்ன” என சொல்லிவிட்டு செல்ல முயன்றவளை தடுத்தான் கொம்பன்

  

”ஒரு நிமிஷம் இரு”

  

”என்ன”

  

”என்னோட நாய்கள் அங்க சாப்பிடாம பட்டினி கிடக்குது, நான் போனாதான் அதுங்க சாப்பிடும்”

  

”அதுக்கு“

  

”நான் போய்ட்டு அதுகளுக்கு சாப்பாடு தந்துட்டு வந்துடறேன்” என சொல்ல அவளோ

  

”மாமா” என சத்தமாக அழைக்க

  

”ஏய் இரு இரு எதுக்கு இப்ப அப்பாவை கூப்பிடற வாயில்லாத ஜீவனுக்கு சாப்பாடு தந்துட்டு உடனே வந்துடறேன், நான் ஒண்ணும் அங்கயே தங்கிடமாட்டேன் நான் போகனும் அனுமதி கொடு“

  

”அத்தை” என இன்னும் சத்தமாக அழைத்தாள் காவேரி

  

”ப்ச் அம்மாவை ஏன் கூப்பிடற நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா பாவம் அங்க நாய்கள் பசியோட இருக்கும், அதுங்க மேலயாவது கொஞ்சம் கருணை காட்டு” என சொல்ல அவளோ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.